• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-20 14:34:29    
சீனாவின் மங்கோலிய இனத்தின் Ulger கலை பற்றி

cri

சீன மங்கோலிய இனத்தின் பிறந்தகம், உள்மங்கோலியாவில் உள்ளது. ஒரு பகுதி மங்கோலிய இனத்தவர்கள், சீனாவின் பீடபூமி பிரதேசமான சிங்ஹ மாநிலத்தில் வாழ்கின்றனர். Oirat மங்கோலிய இன மக்கள் என, அவர்கள் அழைக்கப்படுகின்றனர். துவக்க விழாவில், மூன்று கலைஞர்கள், சிங்ஹ மாநிலத்திலிருந்து வந்தவர்கள். அவர்களில் ஒருவர் கூறியதாவது: 

"சிங்ஹ மாநிலத்தின் அனைத்து மங்கோலிய இனத்தவர்கள் மற்றும் மங்கோலிய இனக் கலை பண்பாட்டை நேசிக்கும் மக்கள் சார்பில், நான் கூட்டத்தில் கலந்து கொள்கின்றேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. இக்கூட்டத்தின் மூலம், மங்கோலிய இனத்தின் Ulger கலையை, வெளிக்கொணர வேண்டும் என விரும்புகின்றேன்" என்றார், அவர்.

கலை விழாவின் துவக்க விழாவில், எமது செய்தியாளர்கள், 9 வயது இளம் கலைஞர் ஒருவரை பேட்டி கண்டனர். உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்திலிருந்து வந்த அவர், இளம் பருவத்திலிருந்தே தனது பாட்டனாரிடமிருந்து Ulger கலையைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார். அவரது பிறந்தகமான Horchin புல்வெளிப் பிரதேசத்தில் பரவியுள்ள "Gada Meilin" என்னும் நாட்டுப்புறப்பாடலை அவர் பாடினார்.

100க்கும் அதிகமான கலைஞர்கள், மூன்று நாள் நீடிக்கும் போட்டியில் பங்கெடுத்துள்ளனர்.

நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக சமூகம் வளர்ந்து வரும் இன்று, பல தலைசிறந்த மதிப்புள்ள நாட்டுப்புறப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள், அழிவின் விளிம்பில் உள்ளன. Ulger இதற்கு விதிவிலக்கு அல்ல. சீனச் சமூக அறிவியல் கழக்கத்தின் கீழுள்ள தேசிய இன இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் முனைவர் Siqin Batu பேசுகையில், இதற்கான பல காரணிகளில் இரண்டு மிகவும் முக்கியமானவை என்றார். அவர் கூறியதாவது:

"ஒன்று. Hugurchi கலைஞர்களின் வாரிசுகள் இல்லை. தற்போது, நாடளவில், உண்மையில் Ulgerஐப் பாடக் கூடியவர்கள், 60 முதல் 70 பேர்கள் மட்டுமே. அவர்கள் இயற்கை எய்திய பிறகு, Ulger கலை, கையேற்றப்படாமலிருக்கும் ஆபத்து நிலவுகிறது. இரண்டு, கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகள் முதல், Ulger கலைப் பாடல்கள் நலிந்து வரும் நிலையில் உள்ளன. பல்வகை பொழுதுபோக்குகள் காரணமாக பொது மக்கள், குறிப்பாக இளைஞர்களின் அக்கறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கவும், இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் பங்கெடுக்கவும் அவர்கள் மிகவும் விரும்புகின்றனர்"
கதைப்பாடல் பாரம்பரியம், இளம் தலைமுறையினரை இழந்து விட்டதாக அவர் கூறினார்.

இதனால், தனித்தன்மை வாய்ந்த Ulger கலையைப் பாதுகாப்பது உடனடித் தேவையாகும். போட்டி நடத்துவது உள்ளிட்ட கலை விழாவை நடத்துவது பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும்.


1 2