• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-23 13:52:38    
இரு தரப்பு வர்த்தகக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் சீனா மற்றும் ரஷியாவின் முயற்சி

cri
மார்ச் 26ம் நாள் சீன அரசுத் தலைவர் ஹுச்சிங்தாவ் ரஷியப் பயணம் மேற்கொண்டதுடன், 2007ஆம் ஆண்டு ரஷியாவில் சீன ஆண்டு என்ற நடவடிக்கை துவங்கியது. இதற்கு மறு நாளன்று, சுமார் 430 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 21 பொருளாதார-வர்த்தக ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் சீனா, ரஷியா ஆகிய இரு நாடுகளின் தொழில் முனைவோர் கையொப்பமிட்டுள்ளனர். இரு நாடுகளுக்கிடை பொருளாதார-வர்த்தக ஒத்துழைப்பு வேகமாக வளரும் காலத்தில் நுழைந்துள்ளதை இது குறிக்கின்றது.

கடந்த ஆண்டில் சீன-ரஷிய வர்த்தகத் தொகை 3340 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. 2005ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் இது 14.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. சீன-ரஷிய வர்த்தக மதிப்பு தொடர்ந்து 8 ஆண்டுகளாக 10 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துவருகின்றது. இவ்வாண்டின் முதல் 2 திங்களில் இரு தரப்பு வர்த்தகத் தொகை கடந்த ஆண்டில் இருந்ததை விட 40 விழுக்காடு கூடுதலாகும். சீன-ரஷிய பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு தொடர்ந்து வேகமாக வளர்ச்சியடைந்துவருகின்றது. ஆனால், இதைக் கண்ட இவ்விரு நாட்டுத் தலைவர்களும் மகிழ்ச்சியடைவதோடு, இரு தரப்பு வர்த்தகத்தில் நிலவும் கட்டமைப்புப் பிரச்சினையில் பெரும் கவனம் செலுத்தியுள்ளனர்.

வணிகப் பொருட்களின் வகை குறைவு. குறிப்பாக, இயந்திர-மின்சாரப் பொருட்கள் வகிக்கும் விகிதம் குறைவாக உள்ளது என்பது தற்போதைய சீன-ரஷிய வர்த்தகத்தில் நிலவும் முக்கிய பிரச்சினை ஆகும் என்று சீனச் சமூக அறிவியல் கழகத்தின் நிபுணர் சாங் சொங் ஹுவா கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது,

வர்த்தகத்தில் ரஷியாவின் இயந்திர-மின்சாரப் பொருட்களின் விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துவருகின்றது. தற்போதைய சீன-ரஷிய பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து, இரு நாடுகளின் வர்த்தகக் கட்டமைப்பை மேம்படுத்தி, வர்த்தக ஒத்துழைப்பு நிலையை உயர்த்த சீனா விரும்புகிறது என்றார் அவர்.

புள்ளிவிபரங்களின் படி, கடந்த ஆண்டில் சீனாவின் இறக்குமதியில் இயந்திர-மின்சாரப் பொருட்கள் வகிக்கும் விகிதம் 50 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. ஆனால், இதில் ரஷியாவின் இயந்திர-மின்சாரப் பொருட்களின் விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. வர்த்தகக் கட்டமைப்பை மேம்படுத்துவது குறிப்பாக ரஷியாவிலிருந்து சீனா இறக்குமதி செய்யும் இயந்திர-மின்சாரப் பொருட்களை அதிகரிப்பது பற்றி சீன-ரஷிய தலைவர்கள் ஒத்த கருத்துக்கு வந்துள்ளனர். இதற்காக, அனைத்து இன்றியமையாத நிலைமைகளையும் உருவாக்க சீனா பாடுபடும் என்று சீனத் துணை வணிக அமைச்சர் யு குவாங் சோ சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறியதாவது,

கடந்த ஒரு காலத்தில், சீன-ரஷிய வர்த்தகம் உயர் வேகத்தில் வளர்ந்துவந்தது. ஆனால் வர்த்தகத்தில் தோன்றிய புதிய நிலைமையைக் கவனித்திருக்கிறோம். இதனால், வர்த்தகக் கட்டமைப்பைச் சரிப்படுத்துவது, இயந்திர-மின்சாரப் பொருட்களின் வர்த்தகம், மரத் துண்டுகளின் பதனீடு தொடர்பான வர்த்தகம் மற்றும் இதர துறைகளிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வர்த்தகக் கட்டமைப்பை நியாயமாக்குவதற்குத் துணை புரியப் பாடுபடுகின்றோம் என்றார் அவர்.

இப்பிரச்சினையைத் தீர்க்க, இரு தரப்பு வர்த்தகக் கட்டமைப்பைச்சீராக்கும் நடவடிக்கைகளைச் சீனாவும் ரஷியாவும் மேற்கொண்டுள்ளன.

மாஸ்கோவில் நடைபெறும் சீனத் தேசிய பொருட்காட்சி, சீன அரசு மேற்கொண்டுள்ள முக்கியமானதொரு நடவடிக்கையாகும். ரஷியாவில் சீன ஆண்டு என்ற நடவடிக்கையில் முக்கிய இடம் வகிக்கும் சீனத் தேசிய பொருட்காட்சியானது, வெளிநாடுகளில் நடைபெறும் அளவில் மிகப் பெரிய கண்காட்சியாகும். சீன வரலாற்றில் முன்னென்றும் கண்டிராதது. நூற்றுக்கும் அதிகமான சீனத் தொழில் நிறுவனங்கள் ரஷியாவுக்குச் சென்று கொள்வனவு செய்துள்ளன. இயந்திர-மின்சாரப் பொருட்களின் இறக்குமதி உடன்படிக்கைகள் பலவற்றில் இரு நாடுகளின் தொழில் நிறுவனங்கள் கையொப்பமிட்டன. அவற்றின் மொத்த மதிப்பு 50 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.

1 2