சீனத் தேசிய பொருட்காட்சி உட்பட, ரஷியாவில் சீன ஆண்டு தொடர்பான நடவடிக்கைகளை ரஷிய அரசுத் தலைவர் புஜின் பாராட்டினார். அவர் கூறியதாவது,
இரு நாடுகளுக்கிடை ஒத்துழைப்புத் தரம் மற்றும் நிலையை
மேலும் உயர்த்துவதே இந்நடவடிக்கைகள் நடைபெறும் நோக்கம் ஆகும். பொருளாதார-வர்த்தக மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகள் மூலம், ரஷியா மற்றும் சீனாவின் சமூகச் செயல்பாடுகளுக்கு மெருகூட்டப்படும். அத்துடன், சீனாவை மேலும் நன்கு அறிந்துகொள்வதில் ரஷிய மக்களுக்கு இது துணை புரிகின்றது. இரு நாடுகளின் சீரான உறவு தொடர்வதற்கு இது உத்தரவாதம் அளித்துள்ளது என்றார் அவர்.
சீன-ரஷிய வர்த்தகக் கட்டமைப்பைச் சீராக்குவது என்பது ஒரு நீண்ட காலமான கடின பணியாகும். குறிப்பாக, பொருளதாராத்தின் சந்தை மயமாக்க நிலைமையில், இரு நாட்டு அரசுகளின் சரிப்படுத்தல் முயற்சி மட்டும் போதாது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால், ரஷியாவின் இயந்திர-மின்சாரப் பொருட்களை இறக்குமதி செய்யுமாறு தொழில் நிறுவனங்களைச் சீன அரசு ஊக்குவிக்க வேண்டும். இது தவிர, ரஷியாவும் அதன் பொருட்களின் போட்டியாற்றலை உயர்த்த வேண்டும் என்று சீனச் சமூக அறிவியல் கழகத்தின் நிபுணர் சாங் சொங் ஹுவா கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,
தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதாரம் சந்தைப் பொருளாதாரம் ஆகும். இதனால், ஒத்துழைப்பு மேற்கொள்ளுமாறு தொழில் நிறுவனங்களுக்கு அரசு வழிகாட்டவும் ஊக்கமளிக்கவும் மட்டும் முடியும். ஒத்துழைப்பை மேற்கொள்ளமாறு அவற்றை அரசு நிர்ப்பந்திப்பது சரி வராது. ரஷியா, அதன் இயந்திரத் தயாரிப்பு நிலையையும் போட்டியிடும் ஆற்றலையும் உயர்த்த வேண்டும் என்பது இப்பிரச்சினைக்கான திறவுகோல் ஆகும் என்றார் அவர்.
உண்மையிலே, சீனா, ரஷியா ஆகிய 2 நாடுகளின் அரசுகளும் இதைக் கவனித்திருக்கின்றன. இரு தரப்பு வர்த்தகக் கட்டமைப்பை மேம்படுத்த அவை பல நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துவங்கின. இரு தரப்பும் கையொப்பமிட்ட 21 பொருளாதார-வர்த்தக ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கங்கள் பல துறைகளுடன் தொடர்புடையவை. இவற்றில், எரியாற்றல், மூலப்பொருட்கள், வாகனம், வீட்டுப் பயன்பாட்டு மின்சாரச் சாதனங்கள், வேளாண் உற்பத்திப் பொருட்கள், இயந்திரம், வெட்டு மரப் பதனீடு, கப்பல் கட்டுவது உள்ளிட்ட பல துறைகள் அடங்கும். இரு நாடுகளுக்கிடை பொருளாதார-வர்த்தக ஒத்துழைப்புத் துறை மேலும் விரிவடையும் என்பதை இது காட்டியுள்ளது. 1 2
|