• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-26 14:18:52    
சீன இந்திய நட்புறவு ஆண்டு என்னும் கட்டுரை போட்டிக்கு
இலங்கை காத்தாங்குடி-2 ஏ.எல் எண். ஆர்ஷாத் எழுதிய கட்டுரை

cri

சீனாவும் இந்தியாவும் அயல் நாடுகளாகும். இவை இரண்டும் தற்போது பொருளாதாரத் துறையில் பாரிய வளர்ச்சி அடைந்து வருகின்ற நாடுகளாகும். அது மட்டுமல்ல உலக மக்கள் தொகையில் முதலாம். இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள நாடுகளாகும். எதிர்காலத்தில் இவ்விரண்டு நாடுகளுமே ஆசியாவின் வல்லரசுகளாக திகழப் போகின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே இவ்விரண்டு நாடுகளும் நட்பு ரீதியில் இணைந்து கொள்வது அத்தியவசியமாகின்றது. இவ்விரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று விட்டுக் கொடுத்து பரங்பரம் நல்ல முறையில் இணைந்து கொள்வார்களாயின் அது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விடயம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

சீனாவும் இந்தியாவும் நட்புறவு ரீதியில் இணைந்து கொள்வதற்கு அரசியல் தலைவர்கள் அடித்தளம் இட்டுள்ளனர். இதன் மூலம் சீன இந்திய உறவுகள் மேன்மேலும் விருத்தியடைய வழி கோலப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதார, சமூக பண்பாடு போன்ற விடயங்களில் ஒத்துழைப்பு ஏற்பட்டு இவ்விரண்டு நாடுகளுக்கும் நன்மை அளிக்கும் வகையில் வளர்ச்சி அடைந்து செல்ல வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அரசியல் தலைவர்களின் இவ்வெதிர்பார்ப்பு நிறைவேற வேண்டுமானால் நாட்டின் தலைவர்கள் இணைந்தால் போதாது. இவ்விரண்டு நாடுகளிலுள்ள பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்பதற்கு இணங்க இவ்விரண்டு நாடுகளிலுள்ள மக்களும் நட்புறவு ரீதியில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதற்காக இவ்விரண்டு நாடுகளிலுள்ள வானொலி தொலைக்காட்சி செய்தியேடுகள் இதழ்கள் போன்ற ஊடகங்கள் பொது மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த வகையில் சீன வானொலியானது சீன இந்திய நட்புறவுக்காக பெரும் பங்காற்றி வருகின்றது. இவ்வானொலிச் சேவையானது பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. இவ் வானொலிச் சேவையானது கூடுதலான இந்திய மக்களை கவர்ந்துள்ளது. இச்சேவையில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் மூலம் இந்திய மக்கள் சீன நாட்டின் அரசியல் பொருளாதாரம் பண்பாடு போன்ற விடய.ங்களை நன்கு அறிந்து கொள்ள உதவியாக இருக்கின்றது.

சீன இந்திய நட்புறவிற்கு ஊடகத் துறையின் பங்களிப்பு இவ்விரண்டு நாட்டு மக்களுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக அமைந்துள்ளது. ஊடகத்தின் மூலம் கேட்கும் பார்க்கும் விடயங்களை நேரில் பார்த்து அனுபவிக்க விரும்புகின்றனர். இதனால் சீன மக்கள் இந்தியவுக்கும் இந்திய மக்கள் சீன நாட்டுக்கும் வருகை தருகின்றனர். இது இவ்விரு நாட்டு உல்லாச பயண கற்றுலாத் தொழிலுக்கு உந்து சக்தியாக அமைவதோடு இரு நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கும் பாரிய பங்களிப்பை செய்து வருகின்றது. அது மட்டுமல்ல ஊடகத்தின் மூலம் சீன நாட்டின் வரலாறு அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகள் இயற்கை வளங்கள், கலை நுட்பங்கள், தொழிற்சாலைகள், புகழ் பெற்ற இடங்கள் போன்றவற்றை கேட்றிந்த மக்கள் அவற்றை நேரில் பார்க்கும் போது வியப்படைந்து புதுவித அனுபவத்தை பெறுவதோடு மட்டுமல்லாது இந்திய மக்கள் சீன மக்களோடு பேசிப் பழகி கலந்துரையாடுவதன் மூலம் சீன மக்களோடு இந்திய மக்கள் நட்பு கொள்வதற்கு வாய்ப்பாகவும் அமைகின்றது.

1 2