• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-26 14:18:52    
சீன இந்திய நட்புறவு ஆண்டு என்னும் கட்டுரை போட்டிக்கு
இலங்கை காத்தாங்குடி-2 ஏ.எல் எண். ஆர்ஷாத் எழுதிய கட்டுரை

cri

இதே போல் சீன மக்களும் இந்திய நாட்டுடைய வரலாறு அந்நாட்டு மக்களுடைய வாழ்க்கை முறைகள், கலை நுட்பங்கள் இயற்கை வளங்கள், புகழ் பெற்ற இடங்கள் கடந்த காலத்திலுள்ள அரிய பொருட்கள் போன்றவற்றை பார்த்து மகிழ்வதோடு இந்திய மக்களுடன் பேசிப் பழகுவதன் மூலம் இரு நாட்டு மக்களிடைய நட்புறவு வளர்வதற்கு உல்லாச பயணம், சுற்றுலாத் தொழில் வழிவகை செய்கிறது. மேலும் சீன நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இந்திய மக்கள் கொள்வனவு செய்து தங்களுடைய நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்வதன் மூலமும் அதேபோல் சீன மக்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை தங்களுடைய மக்களுக்கு அறிமுகம் செய்வதன் மூலமும் இவ்விரு நாடுகளுக்கிடைய ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் விரிவடைவதற்கும் சுற்றுலாப் பயணங்கள் மிக முக்கிய பங்கை ஆற்றிவருகின்றன. இதன் மூலம் சீன இந்திய நட்புறவு மேலும் வளர்ச்சியடைவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

அடுத்து இந்திய மக்களிடையே சீன உணவு வகை பிரபலமடைந்து காணப்படுகின்றது. இந்திய உணவகங்களில் சீன உணவு வகைகளுக்கு ஒரு பிரிவு இருப்பதை கவனிக்கக் கூடியதாக உள்ளது. சீன உணவு வகைகளில் கவரப்பட்ட இந்திய மக்கள் வானொலியில் ஒலிபரப்பாகின்ற சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியைக் கேட்டு தங்களுடைய வீடுகளிலேயே அவற்றைச் செய்து உண்டு வருகின்றனர். சீன இந்திய நட்புறவு வளர்வதற்கு ஸஇதுவும் வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகத்தில் தற்பொழுது தொழில் நுட்ப வளர்ச்சி மிக வேகமாக நடந்து வருகின்றது. தொழில் நுட்பத்தை அடிப்படையாக வைத்து உலகில் பல நாடுகள் முன்னேறி வருகின்றன. எனவே இவ்விரு நாடுகளும் தங்களுடைய தொழில் நுட்பத்தை ஒத்துழைப்பு அடிப்படையில் பகிர்ந்து கொள்வதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு மேலும் வளர்வதற்கு உந்து சக்தியாக அமைகின்றது. பாதுகாப்பு சுகாதாரம் போக்குவரத்து போன்ற அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பு ஏற்படுவதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு வளர்வதற்கு வாய்ப்பாக அமையும்.. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த நட்புறவு மேலும் விரிவடைவதற்கு இரு நாடுகளிலுள்ள ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க முன்வர வேண்டும். இந்த அடிப்படையில் நான் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளேன. இந்திய மக்களிடையே கருத்தரங்குகள் துண்டுப் பிரசுரங்கள், சீனப் பொருட்களின் பயன்பாடு, தொழிநுட்ப பலன்கள் பற்றி விளக்கங்களை வழங்கவுள்ளேன். இதனால் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு மேலும் வளரும் என நான் நம்புகின்றேன்.

சீன இந்திய நட்புறவு எந்த விதமான பிரச்சினைகளும் ஏற்படாமல் மென்மேலும் வளர வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு இக்கட்டுரையை முடிக்கின்றேன்.


1 2