• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-26 20:11:55    
சீனரின் மூதாதையர், ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவரா?

cri

சீனரின் மூதாதையர், ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவரா? சீன அறிவியல் கழகத்தின் அறிவியலாளர்களும் அவர்களது வெளிநாட்டுச் சகாக்களும், பெய்ஜிங் கிராமப்புறக் குகை மனிதர்களின் புதைபடிவங்கள் பற்றிய ஆய்வினை அண்மையில் செய்து முடித்துள்ளனர். நாட்டுப்புறக்குகை மனிதர்கள் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்தனர். அவர்கள், ஆண்டு பதிவேடு உடைய மிக முற்கால சீன நவீன மனிதர் ஆவர் என்பதை ஆய்வு முடிவு எடுத்துக்காட்டியுள்ளது. பெய்ஜிங்கில் வாழ்ந்திருந்த நாட்டுப்புறக்குகை மனிதர்களின் புதை படிவங்களை ஆய்வாளர்கள் ஒப்பிட்டுப்பார்த்து ஆராய்ந்தனர். சீனரின் மூதாதையர், முற்றிறும் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள் என்று கூற முடியாது என்பது, அவர்களின் ஆய்வு முடிவாகும்.

மனிதகுலத்தின் தோற்றுவாய் என்பது பற்றி, கல்வி சார் வட்டாரங்களிடையே சாச்சை நிலவிக் கொண்டே இருக்கிறது. இதில் ஒரு பகுதி ஆய்வாளர்கள், ஆப்பிபிக்க தோற்றுவாய் என்ற கருத்தினைக் கொண்டுள்ளனர். அதாவது நவீன மனிதர், ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு, ஐரோப்பா பின்னர் ஆசியா சென்றடைந்தனர். ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இவர்கள், பல்வேறு இடங்களில் இருந்த ஆதிமனிதருக்குப் பதிலாக, நவீன மனிதரின் மூதாதையராக மாறினர். உள்ளுர் ஆதிமனிதரோ அழிந்துபட்டனர்.

பெய்ஜிங் மனிதரின் தலைமுறையினர், படிப்படியாக வளர்ந்து பரிணமித்து, சீனாவின் நவீன மனிதராக மாறினர் என்பது, மற்றொரு கருத்தாகும். இக்கருத்தானது, ஆப்பிரிக்கர், நவீன மனிதகுலத்தின் ஒரே ஒரு தோற்றுவாய் என்ற கருத்தை ஆதரிக்கவில்லை. மாறாக, பல்வேறு இடங்களிலும் நவீன மனிதரின் பரிணாமப் போக்கு உண்டு. எனவே, இக்கருத்து, "பல பிரதேச பரிணாமம்" எனப்படுகின்றது. நாட்டுப்புறக் குகை மனிதர் தொடர்பான ஆய்வு முடிவு, பிந்தைய கருத்துக்கு ஆதரவளிப்பது, குறிப்பிடத்தக்கது.

 ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்

அல்ஜீரிய நாட்டின் தலைநகரான அல்ஜீயர்சிலுள்ள ஒரு மருத்துவ மனையில், இந்நாட்டைச்சேர்ந்த பெண்மணி ஒருவர் ஏப்ரல் 18ஆம் நாள், ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்றார். இதில் ஒன்று, ஆண் குழந்தை. ஏனைய ஆறும், பெண் குழந்தைகள். ஆண் குழந்தை, தாயின் கருப்பையிலே இறந்து விட்டது.

தற்போது, தாயும் 6 பெண் குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

1 2