
27 வயதான இப்பெணமணி, குழந்தை பெற இயலாது என்று கருதப்பட்டவர். இதற்காக, கடந்த 3 ஆண்டுகளாக மகப்பேறு சிகிச்சை பெற்று வந்தார். 6 பெண் குழந்தைகள் உயிருடன் வாழ்வது என்பது, இத்தம்பதியருக்கு மட்டற்ற மகிழ்ச்சி தந்துள்ளது. "குழந்தை ஒன்றைப் பெறுவதில் எனக்கு அதிக விருப்பம் தான். இறைவனோ, எனக்கு 6 குழந்தைகளைக் கொடுத்தான்" என்றார் இப்பெண்மணி்.
உலகளாவிய கின்னஸ் சாதனை நூலின் படி, இப்பிரசவத்திற்க்கு முன், ஏற்கனவே 7 குழந்தைகள் பெற்ற தாயும் குழந்தைகளும் உயரோடு இருக்கும் நிகழ்ச்சி, சவுதி அரேபியாவில் ஒரு முறையும் அமெரிக்காவில் இருமுறையும் நடந்துள்ளது.
சிக்காகோவில் வானளாவி
அமெரிக்காவின் சிக்காகோ நகரம், 610 மீட்டர் உயரமுடைய வானளாவி ஒன்றைக் கட்டியமைக்கத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்க்கு ஒப்புதல் அளிக்குமாறு இந்நகரத் திட்டக்குழு, தொடர்புடைய தரப்பிடம் பரிந்துரை செய்துள்ளது.
கட்டப்படும் இப்புதிய கட்டடம், அமெரிக்க நாட்டின் மிக உயரமான வானளாவியாக மாறிவிடும்.
இந்த வானளாவிக்கு, "சிக்காகோ திருகு சுருள் கோபுரம் "என்று பெயர். 150 அடுக்குமாடிகளுடன் கூடிய இம்மாளிகை, திருகு சுருளாக ஏறும் வடிவமைப்புடையது. அதில் வணிகப்பயன்பாட்டுக்கு அல்லது வசிப்பதற்கு 1200 பிரிவுகள் உண்டு. ஸ்பெயின் நாட்டில் பிறந்த பிரபல சிற்பியான சண்டியாகோ கராட்லாவா இதை வடிவமைப்பவர்.
ஆஸ்திரேலியாவில், மர அடக்கம்
உலகம் வெப்பமாகிவருவதால், பல்வேறு எரியாற்றல் சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆஸ்திரேலிய அறிவியலாளர் ஒருவர், புதிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறையான-மர அடக்கத்தை முன்வைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இனப்பெருக்க உயிரின இயல் பேராசிரியர் ரோக் ஷொட் என்பவர், ஏப்ரல் 18ஆம் நாள் அன்று செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில், பிணத்தைத் தகனம் செய்வது, தொன்றுதொட்டு நிலவி வரும் பாரம்பரிய வழக்கமாகும். ஆனால், இவ்வாறு செய்வது, பூமியின் வெப்பத்தைத் தீவிரப்படுத்தும். இதை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலாக, மர அடக்கம் என்ற முறையைக் கையாளலாம். மர அடக்கமானது, பிணத்தை ஒரு காகிதப் பெட்டியில் வைத்து, அதை மரத்தடியில் புதைப்பதாகும். பிணம், அழுகிப் போகும் போது, வெளிவிடும் கரியமிலவாயு, மரங்களின் வளர்ச்சிக்கு ஊட்டச் சத்து வழங்கும் என்றார் அவர்.
இந்த வழிமுறையைப் பயன்படுத்தினால், மனிதர் மரணமடைந்த பின், மீண்டும் இயற்கைக்குத் திரும்புவார். இது, பூமியை மீட்கும் வழிமுறைகளில் ஒன்றாகும். 1 2
|