• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-30 08:41:50    
சமூகப் பொறுப்பு குறித்த சீனத் தொழில் நிறுவனங்களின் கருத்து ஒற்றுமை

cri

கடந்த சில ஆண்டுகளில், தொழில் நிறுவனங்கள் எந்த அளவு சமூகப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதில் மேன்மேலும் அதிகமான பல்வேறு துறையினர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். இவ்வாண்டின் துவக்கத்தில், சீனாவின் சில பெரிய அரசுத் தொழில் நிறுவனங்களும் தனியார் தொழில் நிறுவனங்களும் ஆண்டுக்கான சமூகப் பொறுப்பு பற்றிய அறிக்கைகளை அடுத்தடுத்து வெளியிட்டுள்ளன. சமூகப் பொறுப்பில் மேலும் கவனம் செலுத்தி, இணக்கமான சமூகத்தை உருவாக்குவதில் பங்காற்ற வேண்டும் என்று அவை தெரிவித்துள்ளன. தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு, ஒரு காலத்தில் சீனச் சமூகத்தில் சுறுசுறுப்பாக விவாதிக்கப்படும் முக்கிய பிரச்சினையாகியுள்ளது.

லாபம் பெற்று, பங்குத்தாளர்களின் நலனுக்குப் பொறுப்பு ஏற்பதுவதோடு, தொழிலாளர்கள், சமூகம், சுற்றுச் சூழல் ஆகியவற்றுக்குச் சமூகப் பொறுப்பும் ஏற்க வேண்டும் என்பது தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பாகும். வணிக ஒழுக்கம், பாதுகாப்பான உற்பத்தி, உழைப்பாளர்களின் சட்டப்பூர்வமான உரிமை மற்றும் நலனைப் பாதுகாப்பது, மூலவளத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது முதலியவை சமூகப் பொறுப்பில் இடம்பெற்றுள்ளன.

இந்நூற்றாண்டின் துவக்கம் முதல், ஐ.நாவின் முன்னெடுப்பில் உலகில் புகழ் பெற்ற பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் சில சமூகப் பொறுப்பை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் கவனம் செலுத்திவருகின்றன. எடுத்துக்காட்டாக, INTEL、NIKE、WAL-MART ஆகியவை தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பைக் குறிப்பிட்ட காலத்தில் சமூகத்துக்கு வெளியிட்டு, சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதில் தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டை வெளிப்படுத்திவருகின்றன. இவ்வாண்டு, சமூகப் பொறுப்பு அறிக்கை வெளியிடும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் பெயர் பட்டியலில் சீன பெட்ரோலிய எரிவாயு குழுமம் சேர்க்கப்பட்டுள்ளது.

500 முன்னணித் தொழில் நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள சர்வதேச எரியாற்றல் நிறுவனமான சீன பெட்ரோலிய எரிவாயு தொழில் நிறுவனம் பிப்ரவரி 28ம் நாள், தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு அறிக்கையை முதல் முறையாக வெளியிட்டது. இத்தொழில் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் லீ ழன்சன் இவ்வறிக்கையை வெளியிடுவதன் நோக்கம் பற்றி குறிப்பிட்டார். அவர் கூறியதாவது,

செல்வத்தைச் சிருஷ்டித்து, அரசு சொத்துக்களின் மதிப்பை நிலைநாட்டி, அதிகரிக்க வேண்டும். இது மட்டுமல்ல, தொழில் நிறுவனத்தின் தொடர வல்ல வளர்ச்சியை நிறைவேற்றி, பெறப்பட்ட லாபத்தைப் பங்குத்தாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கும் சமூகத்துக்கும் தர வேண்டும். அரசு பெட்ரோலிய நிறுவனமான எங்கள் தொழில் நிறுவனத்தின் இயல்பு, அதன் சமூகத் தகுநிலை ஆகியவற்றின் காரணமாக இவ்வாறு செய்ய வேண்டி ஏற்பட்டது என்றார் அவர்.

1 2