• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-30 08:41:50    
சமூகப் பொறுப்பு குறித்த சீனத் தொழில் நிறுவனங்களின் கருத்து ஒற்றுமை

cri

முன்பு, சீனாவின் பல தொழில் நிறுவனங்கள் லாபத்தை அளவுக்கு மீறி வலியுறுத்தி, சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவது குறைவு. இது பற்றி தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிபுணரும் SHOU இணயத் தளத்தின் நிதி மற்றும் பொருளாதாரப் பகுதியின் தலைமை ஆசிரியருமான wang zi hui பேசுகையில், கடந்த நீண்ட காலத்தில் சமூகப் பொறுப்பு பற்றி அதிகமான சீனத் தொழில் நிறுவனங்களிடையே தப்பெண்ணம் நிலவிவந்தது என்று கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

பணம் சம்பாதிப்பதும் லாபம் பெறுவதும் தொழில் நிறுவனங்களின் மிக முக்கியமான சமூகப் பொறுப்பு ஆகும். தொழில் நிறுவனங்களுக்கு ஒழுக்க ரீதியில் மேலதிகமான கோரிக்கையை விடுக்கக் கூடாது என்றார் அவர்.

சீனாவின் கணிசமான அளவு தொழில் நிறுவனங்களில் உழைப்பாளர்களின் சட்டபூர்வமான உரிமை மற்றும் நலன் பாதிக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் நிலவுகின்றன. வேறு சில தொழில் நிறுவனங்கள் மூலவளத்தை வீணாக்கி, சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி, போலியான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து, அறிவு சார் சொத்துரிமையை ஊறுபடுத்தியுள்ளன. இவையனைத்தும் தொழில் நிறுவனங்களின் நலனுடன் நெருங்கிய தொடர்புடைய பொது மக்களுக்கும் நுகர்வோருக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன. இது மட்டுமல்ல, தொழில் நிறுவனங்களுக்கும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பொது மக்களிடையில் தொழில் நிறுவனங்களின் செல்வாக்கும் சீர்குலைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சில தொழில் நிறுவனங்கள் தத்தமது சமூகப் பொறுப்பின் நடைமுறையாக்கத்தை அலட்சியம் செய்திருப்பதற்குக் காரணங்கள் பல உள்ளன. ஆனால், தொழில் நிறுவனங்கள், நலனைப் பெறுவது தவிர, சமூகப் பொறுப்பும் ஏற்க வேண்டும் என்பதைத் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இதுவே முக்கிய காரணமாகும். சமூகப் பொறுப்பில் தொழில் நிறுவனங்கள் கவனம் செலுத்தினால், அவற்றின் போட்டியாற்றல் வலுவிழக்கப்படும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இது பற்றி சீன மக்கள் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியர் லீ யிபிங் கூறியதாவது,

தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பை எந்தத் தொழில் நிறுவனம் முதலில் நடைமுறைப்படுத்துகிறதோ அந்தத் தொழில் நிறுவனம் தன் வலிமை மிக்க வணிகச் சின்னத்தை உருவாக்க முடியும். சமூகத்திலிருந்து அளவுக்கு மீறிய நலனைப் பெற முடியும் என்பது உறுதி என்றார் அவர்.

தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பில், நுகர்வோர், தொழிலாளர், பங்குத்தாளர், அறநிலை, சுற்றுச்சூழல் ஆகிய உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது, சீனத் தொழில் நிறுவனங்கள், சமூகப் பொறுப்பை நிறைவேற்றும் போது, நுகர்வோருக்குத் தரமான பொருட்களை வழங்கிச் செவ்வனே சேவை புரிவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று wang zi hui கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

தொழில் நிறுனங்களின் சமூகப் பொறுப்பானது, ஒரு தொழில் நிறுவனத்துக்கும் தொழில் நிறுவனத்தின் நலனுடன் தொடர்புடையவர்களுக்குமிடையிலான பொறுப்பைக் குறிக்கின்றது. தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் அவற்றின் நலனுடன் மிக முக்கியமான தொடர்புடையவர் நுகர்வோர் ஆவர். நுகர்வோருடனான உறவை அலட்சியம் செய்தால், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்குக் கடும் தீங்கு விளைவிக்கக் கூடும். தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் நுகர்வோருக்கு முதலிடம் அளிப்பது என்ற கருத்து மிகவும் சரியானது என்று நான் கருதுகின்றேன் என்றார் அவர்.


1 2