• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-21 17:13:31    
எத்தனால் எரிபொருளால் பாதிப்பு

cri

இன்றைய உலகின் முக்கிய தேவைகளில் ஒன்று எரிபொருள். வாகனங்கள் ஓட்ட, மின்னாற்றல் பெற என நம்முடைய பல தேவைகள் எரிபொருட்கள் இல்லாது போனால் நம் அன்றாட வாழ்க்கை முடமாகிப்போகும். நிலத்துக்காக மூண்ட போர்கள், பின்னர் நிலத்தின் வளங்களுக்காக ஏற்பட்டன, இன்றும் கூட ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த வளங்களில் பெட்ரோல் எனும் எரிபொருளுக்காக இன்றைக்கும் கூட சர்வதேச அளவில் எத்தனை குழப்பங்கள், எத்தனை மோதல்கள்.

மறுபக்கத்தில் மனிதர்களாகிய நாம் பயன்படுத்தும் எரிபொருட்களின் மிச்சங்களாக வெளியேறும் நச்சுபொருட்கள், குறிப்பாக கரியமில வாயு உள்ளிட்டவை வளி மண்டலத்தில் பாதுகாப்பு கவசமாயிருக்கும் ஓசோன் படலத்தில் ஓட்டைகளை ஏற்படுத்தி புவி வெப்பமேறலுக்கு வழி செய்துள்ளன. இன்றைக்கு அறிவியலர்களும், அரசியல்வாதிகளும் ஒன்று சேர பயந்து குரல்கொடுக்கும் இந்த உலக வெப்பமேறல் பிரச்சனையில் சுற்றுச்சூழலுக்கு தீங்கேற்படுத்தும் எரிபொருட்களின் பங்கு குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு உள்ளதை யாரும் மறுக்க இயலாது.

சரி, இதற்கும் ஒரு வழி செய்யலாம் என்று மனித குலம் மாற்று எரிபொருட்களை கண்டுபிடிக்கத்தான் செய்தது. மல மாற்று எரிபொருட்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் நம்மை நாமே பாராட்டிக்கொள்ளலாம். ஆனால் இந்த மாற்று எரிபொருட்களில் பெருமளவில் பயன்பாட்டில் உள்ள எத்தனாலில்தான் ஏதோ சிக்கல் என்கிறது ஒரு ஆய்வு. அதாவது பெட்ரோலுக்கு பதிலாக எத்தானால் எரிபொர்ளை பயன்படுத்துவது சுற்றுப்புறச்சூழலுக்கு உகந்தது என்று நாம் எண்ணியிருக்க, அது அப்படியல்ல மக்களே, எத்தனால் பயன்பாட்டால் காற்றும் மேலும் மாசடைகிறது, இதன்மூலம் மாசடைந்த காற்றால் ஏற்படும் உயிரழப்புகளும் கொஞ்சம் போல் உயர்கின்றன என்கிறது புதிய ஒரு ஆய்வு.

என்னய்யா இது புதுசா ஒரு குண்டை துக்கி போடுறீங்க என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழுவது இயல்பே.. தொட்ரந்து கவனமாக கேளுங்கள்..

1 2