அமெரிக்காவில் மட்டும் 2020ம் ஆண்டுக்குள் அனைத்து ஏக பெரும்பான்மையான வாகனங்கள் தாவரங்களின் மூலாமாக பெறப்பட்ட இந்த எத்தனால் எரிபொருளை பயன்படுத்துமேயானால், காற்று மாசுபாட்டால் ஏற்படும் சுவாசம் சிக்கல் காரணமான உயிரழப்பு ஏறக்குறை 200 அதிகரிக்கும். பெரும்பாண்மையான வாகங்கள் அதுவும் 2020க்குள் எத்தனால் எரிபொருளை மட்டும் பயன்படுத்துமா என்பது வேறு கதை. தற்போது ஆண்டுக்கு ஏறக்குறைய 4700 பேர் அமெரிக்காவில் சுவாசச் சிக்கல், அதாவது மாசு கலந்து காற்றை சுவாசிக்கும் மக்கள் மூச்சுத் திணரல் உள்ளிட்டல் சுவசம் தொடர்பான பிரச்சனைகளுகு ஆளாவதன் மூலம் மரணம் அடைகின்றனர். எத்தனால் எரிபொருள் ஓச்சொன் அளவை அதிகரித்து, கண்ணுக்குத் தெரியாத அந்த வாயுவில் ஒட்டியுள்ள மாசுபாட்டை மேலும் அதிகரிக்கிறதாக கூறுகின்றனர்.
காற்று மாசுபாடு என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் எத்தனால் ஒன்றும் பசுமையான எரிபொருளே அல்ல, பெட்ரோலைக் காட்டிலும் கொஞ்சம் அதிகமாகவே உடல் நலத்திற்கு தீஙேற்படுத்தக்கூடியது என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பொறியியல் பேராசிரியர் மார்க் ஜேக்கப்சன்.
ஆனால் இந்த ஆய்வு பற்றி பல அறிவியலர்களுக்கு குழப்பங்களும், கரிசனைகளும் எழுந்துள்ளன. இந்த ஆய்வை உடனிருந்து நடத்திய ரோனால்ட் வாங் என்பவருமே கூட இந்த ஆய்வு கொஞ்சம் குழப்படியானதுதான், இந்த ஆய்வின் முடிவை வைத்து நாம் அனைவரும் எத்தனால் எரிபொருள் மோசம் என்று தூக்கியெறியத் தேவையில்லை என்கிறார். ஜேக்கப்சன் இந்த ஆய்வை கணிப்பொறி மாதிரிகளைக் கொண்டே நடத்தினார். பனியோடு நச்சு நிறைந்து புகையும் கலந்து, அடர்த்தியானால் நாம் சுவாசிப்பதும் கடினம் என்பது நாம் அனைவரும் அறிவோம். எத்தனால் உண்மையில் பனியும் புகையும் கலந்து காணப்படும் ஸ்மாக் என்பது ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றை தவிர்க்கிறது, தகர்க்கிறது.

மற்ற ஆய்வுகளும், உண்மை நிலவரங்களும் பெட்ரோல் டீசல் போன்றவற்றைக் காட்டிலும் எத்தனால் எவ்வளொவோ மேன்மையானது என்பதையே காட்டுகின்றன என்கிறார் புதுபிக்கவல்ல எரிபொருள் சங்கத்தின் பேச்சாளர் மேட் ஹார்ட்விக். ஆனால் ஜேக்கப்சன் செய்த கணிப்பொறி மாதிரி ஆய்வு எந்த இடத்தில் எத்தனால் பய்ன்பாடு என்பதை குறிப்பிட்டு சொல்கிறது என்பதால், இந்த ஆய்வை நாம் ஒரேயடியாக புறக்கணிக்கவும் முடியாது என்கிறார்கள். அதாவது குறிப்பிட்ட இடத்தில், உதாரணமாக குறிப்பிட்ட மாநிலத்தில் ஏற்கனவே சிக்கலாக உள்ள ஓசோன் படலத்தை, எத்தனால் மேலும் சிக்கலாக்கக்கூடும் என்கிறார்கள். 1 2
|