• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-09 15:26:12    
யுன்னான் மாநிலத்தின் தைவான் விவகார அலுவலகம்

cri

கடந்த சில ஆண்டுகளாக, தைவான் நீரிணையின் இரு கரைகளுக்கிடை உறவின் வளர்ச்சியுடன், தென் மேற்குச் சீனாவில் உள்ள யுன்னான் மாநிலம், தனித்தன்மை வாய்ந்த ஈர்ப்பு ஆற்றலுடன், மேலும் கூடுதலான தைவான் உடன்பிறப்புகளை கவர்ந்துள்ளது. அவர்கள் இங்கு வந்து, பயணம் மேற்கொண்டு, முதலீடு செய்து, தொழில் நடத்தி, கல்வி பயின்று, வாழ்கின்றனர். பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், யுன்னானுக்கும் தைவானுக்குமிடை தொடர்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், தைவான் உடன்பிறப்புகளுக்குச் சேவை புரியும் யுன்னான் மாநில அரசின் தைவான் விவகார அலுவலகத்தின் முக்கியத்துவம் முனைப்பானது.

அழகான யுன்னான்

இப்போது, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, தைவானின் Tai Nan நகரிலிருந்து வந்த பிரதிநிதிக்குழுவின் 70க்கு அதிகமானோர் பாடிய பாடலாகும். யுன்னான் மாநிலத்திலான சோதனை பயணத்தை அவர்கள் முடித்துக் கொண்ட போது, "நாம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்" என்னும் தைவான் நாட்டுப்புறப்பாடலை உணர்ச்சிவசப்பட்டு பாடினர். இப்பாடலின் மூலம், தைவான் விவகார அலுவலகத்தின் பணியாளர்களுக்கு அவர்கள் நனறி தெரிவித்தனர். தைவான் பிரமுகர் Lin Nan Sheng தலைமையிலான இக்குழுவினர், கடந்த ஜனவரி திங்களில், யுன்னான் மாநிலத்தில் 8 நாள் பயணம் மேற்கொண்டனர். தைவானுக்குத் திரும்பும் முன், தைவான் விவகார அலுவலகத்தின் பணியாளர்கள் அவர்களுக்கு சிறப்பான விருந்து அளித்தனர்.

மகிழ்ச்சி நிறைந்த சூழ்நிலையில், இக்குழுவினரில் ஜனவரி திங்களில் பிறந்த 9 பேருக்கு, பிறந்த நாள் கொண்டாட்ட நடவடிக்கையை பணியாளர்கள் நடத்தி, இனிப்பான பிறந்த நாள் கேக்கை வழங்கி தாய்நாட்டு மக்களின் கனிவான வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

யுன்னான் காட்சி

இது போன்ற, உணர்வையும் நட்புறவையும் அதிகரிக்கும் பரிமாற்ற நடவடிக்கைகளை தைவான் விவகார அலுவலகம் அடிக்கடி நடத்துகின்றது. இவ்வலுவலகத் தலைவர் Ai Zhuang பேசுகையில், மகிழ்ச்சியுடன் யுன்னானுக்கு வந்த தைவான் பயணிகளை மனநிறைவுடன் திரும்பச்செய்வது என்பது, பணியாளர்களின் மிகப் பெரிய விருப்பமாகும் என்று கூறினார்.

அழகான, வளமிக்க யுன்னான், சீனாவின் தென் மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் ஒளிவீசும் பண்பாடு, புகழ் பெற்ற பல காட்சித் தளங்கள், வெவ்வேறான நடையுடை பாவனைகள் கொண்ட சிறுபான்மைத் தேசிய இனங்கள், இந்தியாவுடனும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனும் இணையும் மண்டல மேம்பாடு ஆகியவை, இம்மாநிலத்துக்கு வினோதமான ஈர்ப்பு ஆற்றலை தருகின்றது. தவிர, யுன்னானில் விளையும் பொருட்கள் அதிகம்.

இவை, தைவான் உடன்பிறப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. முழுமைபெறாத புள்ளி விபரங்களின் படி, கடந்த சில ஆண்டுகளாக, தைவான் உடன்பிறப்புகள் இம்மாநிலத்தில் பரிமாற்றம் செய்து, சோதனை பயணம் மேற்கொள்ளும் திட்டப்பணிகள் சுமார் ஆயிரமாகும். சுற்றுலா ஒத்துழைப்புத்துறையில், யுன்னான் மாநிலத்துக்கு வந்துள்ள பயணிகளில், தைவான் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம். பயணம் மேற்கொண்டு, பரிமாற்றம் செய்து, சோதனை பயணம் செய்து, வணிகம் செய்து, உற்றார் உறவினர்களைப் பார்க்க, யுன்னானுக்கு வந்துள்ள தைவான் உடன்பிறப்புகளின் எண்ணிக்கை, 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

1 2