• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-09 15:26:12    
யுன்னான் மாநிலத்தின் தைவான் விவகார அலுவலகம்

cri

தைவான் வணிகர்களுடனான ஒத்துழைப்பு

உள்ளூர் பிரதேசத்தின் தனித்தன்மையைச் சார்ந்து, பொருளாதாரம், பண்பாடு, வணிகம், வர்த்தகம், சுற்றுலா உள்ளிட்ட அதிகப்படியான பரிமாற்ற நடவடிக்கைகளை நடத்தி, யுன்னான் மாநிலத்தில் வேலை செய்து, வாழும் தைவான் உடன்பிறப்புகளுக்கு உதவி அளிக்க, தைவான் விவகார அலுவலகம் தன்னால் இயன்றதனைத்தையும் செய்துள்ளது என்று இவ்வலுவலகத்தின் தலைவர் Ai Zhuang கூறினார். அவர் கூறியதாவது: 

"முதலில், மக்களிடை தொடர்பை மேற்கொள்கின்றோம். இரண்டாவது, பண்பாட்டுத் தொடர்பை மேற்கொள்கின்றோம். மூன்றாவது, சிறுபான்மைத் தேசிய இனத்தின் தனித்தன்மை வாய்ந்த தொடர்பை மேற்கொள்கின்றோம். வழிகாட்டல், ஒருங்கிணைப்பு, சேவை மற்றும் நிர்வாகம், இவ்வலுவலகத்தின் கடமையாகும்" என்றார், அவர்.

1989ஆம் ஆண்டு முதல், தைவான் வணிகர்கள் யுன்னானில் முதலீடு செய்யத் துவங்கினர். துவக்கத்தின் சில ஆண்டுகளில், உள்ளூர் பிரதேசத்தின் நிலைமையைப் புரிந்து கொள்ளாததால், யுன்னானில் வேலை செய்த தைவான் உடன்பிறப்புகள் பலர் தருமன் பிடித்த போது, சிகிச்சைக்காக, தைவானுக்கு திரும்பினர். ஆனால், தற்போது இந்நிலைமை நிகழ்வதில்லை. மேலும் அதிகமான தைவான் வணிகர்கள், யுன்னான் மாநிலத்துக்கு தமது குடும்பத்தினர்களைக் கொண்டு வந்துள்ளனர். இது, கடந்த பல ஆண்டுகளாக, தைவான் விவகார அலுவலகத்தின் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளிலிருந்து பிரிக்கப்பட முடியாதது. Kun Ming நகரில் உள்ள தைவான் வணிகர் சங்கத் தலைவர் Li Zhi Ming, கடந்த பத்து ஆண்டுகளாக, யுன்னான் மாநிலத்தில் முதலீடு செய்து வருகின்றார். அவர் கூறியதாவது:

"நான் இங்கு முதலீடு செய்து, 10க்கு அதிகமான ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. தீர்க்கப்பட முடியாத பிரச்சினை தோன்றியதும், தைவான் விவகார அலுவலகத்துக்கு உடனடியாக செல்கின்றேன். பிரச்சினையைத் தீர்க்க, இவ்வலுவலகம் உடனடியாக உதவுகின்றது. தைவான் வணிகர்களின் விடயங்களை இவ்வலுவலகம் மிகவும் ஆதரிக்கின்றது. இது, அனைவரும் அறிந்த உண்மையே" என்றார் அவர்.

பரிமாற்ற நடவடிக்கை

Li Zhi Ming பேசுகையில், ஒரு முறை, தைவான் முதலீட்டுத் தொழில் நிறுவனம் ஒன்றுக்கு அருகில் உள்ள இடத்தில் எரிபொருள் நிலையத்தை நிறுவுவதென யுன்னான் மாநிலத்தின் தொடர்புடைய வாரியம் திட்டமிட்டிருந்தது. இத்தொழில் நிறுவனத்தின் இயல்பான அலுவலை இது பாதிக்கக்கூடும். இத்தொழில் நிறுவனத்தின் தைவான் உரிமையாளர் இதை அறிந்த பின், தைவான் விவகார அலுவலகத்துக்கு உடனடியாகச் சென்று, இவ்வலுவலகத்தின் வேண்டுகோளுடன் இதைத் தீர்க்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இவ்வலுவலகத்தின் தலைவர்கள் தைவான் வணிகரின் கருத்தில் மிகவும் கவனம் செலுத்தி, தொடர்புடைய வாரியத்துக்கு இதை அறிவித்தனர். இறுதியில், இவ்வலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன், வேறு இடத்தில் இந்த எரிபொருள் நிலையம் அமைக்கப்பட்டது என்றார். Li Zhi Ming கூறியதாவது:

"யுன்னான் மாநிலத்துக்கு வந்த தைவான் வணிகர்களுக்கு ஆனந்தம் ஏற்படுகிறது. ஒவ்வொரு விடயம் நிகழும் போதும், தைவான் விவகார அலுவலகம், காலத்தாமதமின்றி இதைத் தீர்க்க உதவுகின்றது. " என்றார், அவர்.

யுன்னான் மாநிலத்தில் வேளாண் துறையிலும் உணவுத் துறையிலும் தைவான் வணிகர்கள் முதலீடு செய்வதைத் தவிர, பொருள் போக்குவரத்துத்துறை, வீடு மற்றும் நில உடைமைத்துறை ஆகியவற்றில் படிப்படியாக முதலீடு செய்கின்றனர். யுன்னான் மாநிலத்தில் செழிப்பான சுற்றுலா வளம் இருப்பதால், தைவான் வணிகர்கள் உள்ளூர் அரசுடன் இணைந்து ஒத்துழைத்து, பெரிய ரக சுற்றுலாக் காட்சித் தளங்களை அமைப்பதில் முதலீடு செய்கின்றனர்.


1 2