• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-14 16:23:08    
மொழியின் தோற்றம்

cri

ஆண் சிம்பன்சி மற்றும் போனோபோக்கள் தங்களுக்கு பசிக்கிறது உணவு கொஞ்சம் தா என்ற சக இனத்தவரிடம் கோட்கும்போதும் சரி, பெண் குரங்குகளை காதல் இச்சைக்கு இணங்க அழைக்கும்போதும் சரி அல்லது மற்ற ஆண் குரங்கினத்தோடு சண்டையிட்டு ஓய்ந்து சரி நாம் அமைதியா பிரிந்து சொல்வோம், நண்பர்களாவோம் என்று சொல்ல விரும்பினாலும் சரி, திறந்த கைகளை நீட்டுகின்றனவாம். அதாவது ஒரே ஒரு அசைவுதான் ஆனால் இடத்திற்கு ஏற்றார்போல் அது வெவ்வேறு பொருள்கொள்ளப்படுகிறது. ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. முக பாவங்களைக் காட்டிலும், குரல் எழுப்பி தொடர்புகொள்வதைக் காட்டிலும் இவை சைகைகளை, அங்க அசைவுகளின் மூலமான மொழியையே அதிகமாக பயன்படுத்துகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மனிதர்கள் இயல்பாகவே அதிகம் அங்க அசைவுகளும், சைகைகளும் மூலம் தொடர்புகொள்ளக் கூடியவர்கள். அனேகமாக மனித மொழி இத்தகைய அங்க அசைவுகளை முக்கியமாகக் கொண்ட சைகை மொழியாகவே முதலில் தோன்றியிருக்கும், பரிணாம வளர்ச்சிக்கிணங்க மனித மூளையின் மொழியைச் சார்ந்த பகுதிகள் நன்றாக வளர்ச்சியடைந்தபின் பேச்சு மொழியானது உருவாகியிருக்கும் என்கிறார் அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் மனிதர்கள், குரங்குகள் உள்ளிட்ட பாலூட்டியினத்தின் உயர்நிலை இனங்கள் தொடர்பான முதனியியலாளராக உள்ள பிரான்ஸ் தே வால். இந்த ஆய்வுக்காக சான் டியாகோவிலுள்ள வனவிலங்கு பூங்காவின் 13 போனோபோக்களையும், யெர்கெஸிலுள்ள வனவிலங்கு பூங்காவின் 34 சிம்பன்சிகளையும் கூர்ந்து கவனித்து, ஒளிப்பதிவு செய்தார் தே வால். அவரது உதவியாளர் ஏமி பொல்லாக்கும் அவருமாக மொத்தம் 31 கை மற்றும் கால் சைகைகளையும், 18 முக முகபாவ உணர்ச்சி வெளிப்பாடுகளையும், குரலெழுப்பலையும் பதிவு அவதானித்தனர். இதில் இரண்டு வகை குரங்கினங்களுமே முகபாவங்கள், குரலெழுப்பல்கள் இவற்றை ஒரே வகையானசூழலில், நம்மால் கணிக்கக்கூடியதாக பயன்படுத்தியதையும், குறிப்பாக வலி மற்றும் பயம் ஏற்பட்டால் சத்தமாக கத்தின என்றும் இந்த ஆய்வாளர்கள் கண்டனர். ஆனால் சைகைகளை பொறுத்தவரை ஒரு குறிபிட்ட அங்க அசைவு வேறுபட்ட இடங்களில், சூழலில் வெவ்வேறு பொருள் கொள்ளப்பட்டதை அவர்கள் கண்டனர். முதனிகள் எனப்படும் உயர் நிலை பாலூட்டி இனங்கள் எல்லாமே முக பாவங்கள், குரலெழுப்பல்கள் மூலம் தொடர்புகொள்கின்றன, தங்களுக்குள் செய்திகளை பரிமாறிக்கொள்கின்றன. ஆனால், மனிதர்கள், சிம்பன்சிகள், போனோபோக்கள், உராங் உட்டான்கள், கொரில்லாக்கள் ஆகியவை மட்டுமே இவ்வாறு சைகைகளை வெவ்வேறு பொருள் கொண்டவையாக பயன்பாட்டில் வைத்துள்ளன. இந்த குரங்கினங்களின் உயர் நிலை இனங்கள் கிட்டத்தட்ட 15 முதல் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக இருந்துள்ளன என்பதால், இத்தகைய சைகைகளும் நீண்டகாலமாக இருந்துள்ளன என புரிகிறது.

மேலும் பொதுவாக இந்த குரங்கினங்கள் சைகை செய்ய விரும்பும்போது வலது கையையே பயன்படுத்துகின்றனவாம். வலது கையைக் கட்டுப்படுத்துவது இடது பக்க மூளையாகும். மனித மூளையில் மொழிக் கட்டுப்பாட்டு மையம் அமைந்திருப்பதும் இடது பக்கத்தில்தான் என்பது கூடுதம் தகவல். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று சொல்லப்படும்போது , வருத்தப்படத் தேவையில்லை.


1 2