
யுவான் லுங் பிங்
உலகக் கலப்பின நெல் இயலின் தந்தை எனப் போற்றப்பட்டுள்ள சீன அறிவியலாளர் யுவான் லுங் பிங், பிரபலச் சீன நமி தொழில்நுட்ப வல்லுனர் பாய் சுன் லி ஆகிய இருவரும், அமெரிக்க அறிவியல் கழகத்தின் வெளிநாட்டு உறுப்பினர்களாக அண்மையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
140 ஆண்டு பழமை வாய்ந்த அமெரிக்க அறிவியல் கழகமானது, உலகின் உச்ச நிலை அறிவியல் கழகமாகும். இக்கழகம்,ஆண்டுதோறும் உலகளவில் குறிப்பிட்ட அறிவியல் துறையில் மனித குலத்திற்கு மாபெரும் தொண்டாற்றும் பல்வேறு நாடுகளின் தலைசிறந்த பிரநிநிதிகளை திறனாய்வு மூலம் தனது வெளிநாட்டு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கின்றது. நடப்பு ஆண்டில், உலகளாவிய நிலையில் 18 உச்ச நிலை அறிவியலாளர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளனர். இது வரை, சீனாவைச்சேர்ந்த 6 அறிவியலாளர்கள் இக்கழக்தில் அங்கத்துவம் வகித்துள்ளனர்.

யுவான் லுங் பிங்
அமெரிக்க அறிவியல் கழகத்தின் தலைவரும் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான சிசெலோனா, ஏப்ரல் 19ஆம் நாள் நடைபெற்ற புதிய உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழாவில் பேசுகையில், திரு யுவான் லுங் பிங் கண்டு பிடித்த கலப்பினத் தொழில்நுட்பம், உலகத் தானியப் பாதுகாப்புக்கு ஈடிணையற்ற பங்கினை ஆற்றியுள்ளது. இதனால் கூடுதலாக விளையும் தானியம், உலகில், ஆண்டுதோறும் 7 கோடி மக்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்த்துள்ளது என்று கூறினார்.
1 2
|