தெளிந்த ஆற்று நீர்-பசுமையான மலைகளுக்கிடையே இணைந்து கிடக்கும் பழத்தோட்டம், சீரான மாடி கட்டிடங்கள், தெற்கு சீனாவின் குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்து கெங் சென் நகரத்தைச் சேர்ந்த யோ இனத் தன்னாட்சி மாவட்டத்தின் கிராமப்புறத்தில் காணப்படும் தோற்றம், இதுவாகும். விருந்தோம்பல்மிக்க யோ இன உடன்பிறப்புகள், நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக் கொண்டே தொலைவிலிருந்து வருகை தந்துள்ள பயணிகளை வரவேற்கின்றனர். முன்பு வறிய மாவட்டமாக இருந்தது, இன்றைய நிலைக்கு மாறியதற்கு காரணம் என்ன? இன்றைய நிகழ்ச்சியில், யோ இன உடன்பிறப்புகளின் இன்றைய இன்ப வாழ்க்கையை அறிய தங்களை அங்கு அழைத்துச் செல்வோம்.
பத்தாண்டுகளுக்கு முன், Ye Gui Rong அம்மையார், கெங் சென் நகரிலுள்ள யோ இனத் தன்னாட்சி மாவட்டத்தின் Huang Ling கிராமத்தில் திருமணம் செய்தார். அப்போது, மாமியார் குடும்பத்தின் வருமானம் குறைவு. வாழ்க்கை இன்னலாக இருந்தது. ஆனால், இன்றைய வாழ்க்கை பற்றிக் குறிப்பிடும் போது அவரது முகத்தில் புன்சிரிப்பு தாண்டவமாடியது. அவர் கூறியதாவது:

"இப்போது, மீத்தேன் வாயுவை பயன்படுத்துகின்றோம். பன்றிகளை வளர்க்கின்றோம். பழவகைகளைப் பயிரிடுகின்றோம். இப்போது நாங்கள் நினைத்தவற்றை பெற முடியும்" என்றார். அவர் கூறிய மீத்தேன் வாயுவை, கிராமத்தின் ஒவ்வொரு குடும்பமும் பயன்படுத்துகின்றது. இக்கிராமத்தின் கமிட்டித் தலைவர் Huang Guang Fa பேசுகையில், மீத்தேன் வாயு, உள்ளூர்வாசிகளின் எரிபொருள் பிரச்சினையைத் தீர்த்து விட்டது. இது மட்டுமின்றி, முழு கிராமத்தின் வளர்ச்சிக்கான வழிமுறையையும் மாற்றியுள்ளது என்றார். இத்தகைய இயற்கைச்சூழல் ரக வேளாண்மையினால், கிராமவாசிகளின் வருமானம் அதிகரித்துள்ளது. நபர்வாரி ஆண்டு நிகர வருமானம், 3500 யுவானை எட்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
"மீத்தேன் வாயுவைப் பயன்படுத்துவதினால், நேரம் சிக்கனமாகலாம். சமையல் அறையும் மற்ற அறைகளும் வெளிப்புறமும் சுத்தமாக இருக்கலாம். நோய்கள் குறையமுடியும். இயற்கைச்சூழல் வனத்தொழில் வரைலாம்" என்றார், அவர்.

Huang Ling கிராமத்தில், மீத்தேன் வாயு மூலம் வளமடையும் வழிமுறை, கெங் சென் நகரத்தின் யோ இனத் தன்னாட்சி மாவட்டத்தில் கிராமப்புறத் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் ஒரு சுருக்கமாகும். கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், கெங் சென் நகரத்தின் யோ இனத்தன்னாட்சி மாவட்டத்தில் மீத்தேன் வாயு பரவலாக்கப்படத்துவங்கியது. கடந்த பல ஆண்டுகளில், கொள்கையின் வழிகாட்டலுடன், நிதியுதவியைக் கொண்டு 2005ம் ஆண்டில், மாவட்டம் முழுவதிலும் 88 விழுக்காட்டு குடும்பங்கள் மீத்தேன் வாயுவைப் பயன்படுத்தத் துவங்கின.
மீத்தேன் வாயுத் திட்டப்பணியினால், விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். முதலில், முழு மாவட்டத்திலும், ஒவ்வொரு மீத்தேன் வாயு தொட்டியை கட்டும் போது, இசைவாக 5 பன்றிகள் வளர்க்கப்பட வேண்டும். பன்றி வளர்ப்புத்தொழிலின் வளர்ச்சியை இது விரைவுபடுத்தியுள்ளது. தவிரவும், அவற்றின் கழிவுகள், உரமாக பயன்படுத்தப்பட்டதினால், பயிர்கள் சிறந்த விளைச்சலைத் தருகின்றன. தூய்மைக்கேடு இல்லாததால் பாதிப்பும் ஏற்படாது. இதன் காரணமாக, கெங் செங் நகரத்தின் யோ இனத் தன்னாட்சி மாவட்டம், அடுத்தடுத்து பத்தாண்டுகளாக அமோக தானிய அறுவடையை பெற்றுள்ளது.
1 2
|