• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-18 17:02:36    
யோ இனத்தின் வளமான ஊர்

cri

சுற்றுச்சூழல், இதனால் மேலும் மேம்பட்டுள்ளது. மீத்தேன் வாயுத்திட்டப்பணி நடைமுறைக்கு வந்த பின், யோ இனத் தன்னாட்சி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் டன் எரி பொருள் சிக்கனமாகியுள்ளது. 3000 ஹெக்டர் நிலப்பரப்பிலான மர வளம் பாதுகாக்கப்படுவதற்கு இது சமம். மீத்தேன் வாயுவின் பயன்பாட்டினால், கிராமத்தில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பெரிதும் மேம்பட்டுள்ளது. தொற்று நோய் ஏற்படும் விகிதம், பெருமளவில் குறைந்துள்ளது. கிராமவாசிகள், வெளிநாட்டு பாணியுடைய அழகான மாடி கட்டிடங்களில் வசிக்கின்றனர். உயரிய வீட்டுப் பயன்பாட்டு மின்கருவிகளை வாங்கியுள்ளனர். நகரவாசிகளை விட அவர்களின் வாழ்க்கை நிலை மேம்பட்டுள்ளது. கிராமவாசி ஹுவாங் ஹொங் சியு கூறியதாவது:

"இவ்வளவு நல்ல வீட்டில் வசிக்கலாம் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. கொள்கையின்றி, அரசின் உதவியின்றி இது அறவே முடியாது" என்றார். கெங் செங் நகர யோ இனத் தன்னாட்சி மாவட்டத்தின் தலைவர் தங் யுன் சு பேசுகையில், புதிய ரக கிராமத்தைக் கட்டுவதற்கு, புதிய வீடுகளை மட்டும் கட்டுவது போதாது. விவசாயிகளின் உறைவிட வசதியின் மேம்பாடு, விவசாயிகளின் வருமான அதிகரிப்பு, மிஞ்சிய உழைப்பு ஆற்றலை உள்ளூரில் பயன்படுத்துவது ஆகியவற்றுடன் ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறினார்.

"இவ்வாண்டு எங்களின் குறிக்கோள் பின்வருமாறு. ஒன்று. முழு மாவட்டத்திலும் திட்டத்தில் சேர்க்கப்படாத கிராமங்களை அறிவியல் முறையில் திட்டத்தில் சேர்ப்பது. இரண்டு. சுற்றுலாத்திறனுடைய புதிய கிராமத்தைக் கட்டியமைப்பது. மூன்று. ஏற்கனவேயுள்ள 20 புதிய கிராமங்களை முழுமையாக்கி எங்கள் மாவட்டத்தில் புதிய கிராம நிர்மாணத்தின் வேகத்தை விரைவாக்குவது ஆகியவை இக்குறிக்கோளாகும். புதிய கிராமத்தின் கட்டுமானம், யோ இனக்கிராமத்தின் தேசிய இனச் சுற்றுலாத்துறையின் விரைவான வளர்ச்சியை தூண்டியுள்ளது. சுகம் தரும் கிராமக் காட்சி, ஈர்ப்புச் சக்திமிக்க உயிரின வாழ்க்கைச்சூழல் விவசாயம், தனித்தன்மை வாய்ந்த யோ இன நடையுடை பாவனை இவையாவும், நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து பயணிகள் இங்கு வருவதை ஈர்த்துள்ளன. சுற்றுலா, இந்த சிறு யோ இன கிராமத்தின் புதிய தொழிலாகியுள்ளது. 2006ம் ஆண்டு சுற்றுலா மூலம் மட்டும், கிராமவாசி ஒவ்வொருவரின் வருமான அதிகரிப்பு, 2000 யுவானாகும். சில யோ இன குடும்பங்களின் வருமானம் ஒரு லட்சம் யுவானைத் தாண்டியுள்ளது. யோ இனத்தவர் சு தியன் யூ மகிழ்ச்சியுடன் கூறியதாவது:

"எங்கள் கிராமம், ஒருமுறையில் 400க்கும் அதிகமான பயணிகளை வரவேற்க முடியும். இப்போது பயணிகள் மென்மேலும் அதிகமாகி வருகின்றனர்" என்றார், அவர்.


1 2