• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-25 20:45:01    
சிறுபான்மை தேசிய இன எழுத்துகளுடைய மென் பொருள் செல்லிட பேசி

cri

சீனாவில், ஹன் இனத்தின் எழுத்துக்களை அவ்வளவு தெரியாத உய்கூர் இன மக்கள், தற்போது, சொந்த இன எழுத்துகளுடைய மென் பொருள் பொருத்தப்பட்டுள்ள செல்லிட பேசி மூலம் தத்தமது உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் குறுந்தகவல்கள் அனுப்பி தொடர்பு கொள்ள முடியும். சீனாவின் டிஜிட்டல் தொழில் நுட்ப ஆய்வு மற்றும் மேம்பாட்டு கூட்டு நிறுவனம் ஒன்று இச்செல்லிட பேசியை தயாரித்துள்ளது. அண்மையில் இந்நிறுவனம், செல்லிட பேசிக்கென, மங்கோலிய இனம், திபெத் இனம், கஜக் இனம் முதலிய 9 சிறுபான்மை தேசிய இனங்களின் எழுத்துக்களுடைய மென் பொருட்களை ஆராய்ந்து தயாரித்துள்ளது. இதனால், இந்த 9 சிறுபான்மை தேசிய இனத்தவர்களும் விரைவில் தங்கள் சொந்த மொழியில் செல்லிடப்பேசியைப் பயன்படுத்த முடியும். இன்றைய நிகள்ச்சியில் இது தொடர்பாக கூறுகின்றோம்.

இந்த செல்லிட பேசிகளில் பொருத்தப்பட்டுள்ள மென் பொருட்கள் பெய்சிங் Wang Dao தொலைத்தொடர்பு டிஜிட்டல் தொழில் நுட்ப வடிவமைப்பு கூட்டு நிறுவனத்தால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்டவை. இந்நிறுவனத்தின் தலைமை மேலாளர் Zhang Yan மென் பொருளின் தனித்தன்மை பற்றி எடுத்துக்கூறியதாவது:

"ஒன்று. செல்லிட பேசியின் திரையில் சிறுபான்மை தேசிய இன எழுத்துக்கள். சீன மொழி தெரியாத அல்லது நன்கு தெரியாத சிறுபான்மை தேசிய இனத்தவர்கள் தங்களது எழுத்துக்களைக் கண்டு அனைத்து செயல்பாடுகளையும் அறிந்து கொள்ள முடியும். இரண்டு. சிறுபான்மை தேசிய இன எழுத்துக்களிலான குறந்தகவல்களை இச்செல்லிட பேசியில் பெறவும் அனுப்பவும் முடியும். தவிர, சிறுபான்மை தேசிய இனங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் சில குறுந்தகவல் வார்த்தைகளும் செல்லிட பேசியில் உண்டு. எடுத்துக்காட்டாக, திபெத் மொழி செல்லிட பேசியில் மங்களம் என்னும் பொருளுடைய Zhaxidele என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது" என்றார்.

சீனாவில் சிறுபான்மை தேசிய இன மக்கள் தொகை, பத்து கோடியைத் தாண்டியுள்ளது. தத்தமது எழுத்துகளைப் பயன்படுத்தும் சிறுபான்மை தேசிய இனங்களின் மக்கள் தொகை, சுமார் 7 கோடி. அதே வேளையில், சிறுபான்மை தேசிய இனங்கள், சிதறி வாழ்கின்றன. உதாரணமாக, திபெத் இன ஆயர்கள், நீண்டகாலமாக தொலை தூரத்தில் ஆடுமாடுகளை மேய்க்க வேண்டியுள்ளது. செல்லிட பேசி மூலம் மட்டுமே அவர்கள் குடும்பத்தினர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். வலுவான காற்று வீசும் இடங்களில், குறுந்தகவல் அனுப்புவது பேசுவதை விட மேலும் சரியானது. மேலும் நம்பகமானது. எனவே, சிறுபான்மை தேசிய இன எழுத்துக்களுடைய மென் பொருட்கள் பொருத்தப்பட்டுள்ள இத்தகைய செல்லிட பேசியின் சந்தைக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்று Zhang Yan கருத்து கூறினார்.

மூன்றாண்டுகளுக்கு முன், Wang Dao தொலைத் தொடர்பு கூட்டு நிறுவனம், சீன Shou Xin குழுமத்துடனும், சிங்கியாங் செல்லிட பேசி கூட்டு நிறுவனத்துடனும் ஒத்துழைத்து, உய்கூர் இன மொழி பொருத்தப்பட்டுள்ள முதலாவது செல்லிட பேசியை சந்தைப்படுத்தியது. சீனாவின் உய்கூர் இன உடன்பிறப்புகளின் கவனத்தையும் விருப்பத்தையும் இது ஈர்த்துள்ளது. இத்தகைய செல்லிட பேசியைப் பயன்படுத்தும் உய்கூர் இன மங்கையர் Ajargul செய்தியாளரிடம் பேசுகையில், உய்கூர் இன மொழியுடைய மென் பொருள் பொருத்தப்பட்ட செல்லிட பேசி, தமக்கும் உற்றார் உறவினர்களுக்குமிடை தொடர்புக்கு வசதியாக உள்ளது என்றார்.

"முன்பு, ஹன் இன மொழி செல்லிட பேசி மூலம் குறுந்தகவலை அனுப்பினேன். எனது தாய்மொழி ஹங் இன மொழி அல்ல என்பதால், வசதியில்லை. இப்போது இத்தகைய செல்லிட பேசி இருக்கின்றது. இது நல்லது. சந்திக்க முடியாத குடும்பத்தினர்கள், சக மாணவர்கள், நண்பர்களுடன் தொடர்பு கொள்ளும் போது, குறந்தகவலை அனுப்புவது மிக நல்லது. நான் அடிக்கடி அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்க முடியும்" என்றார்.

1 2