• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-30 09:10:12    
தமிழ் மூலம் சீனம் பாடம் 82

cri

கிளிடஸ்.....கலை இன்று முதல் நான் உங்களுடன் இணைந்து நமது நண்பர்களிடம் தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியை வழங்குகின்றேன். இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

கலை.......உங்களுடன் இணைந்து நண்பர்களுக்கு தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி தருவதில் எனக்கு மகிழ்ச்சி.

கிளிடஸ் .........கடந்த வகுப்பில் முக்கியமாக எந்த சொற்களை கற்றுக் கொண்டோம்.

கலை..........நியன், யூயே, ழ, 星期 சிங் ச்சி என்ற சொற்களை முக்கியமாக கற்றுக் கொண்டோம்.

கிளிடஸ்.......சரி வழக்கம் போல புதிய வகுப்பு துவங்குவதற்கு முன் எதாவது நினைவு பயிற்சி செய்ய வேண்டுமா?

கலை......ஆமாம். வழக்கத்தின் படி புதிய வகுப்பு துவங்குவதற்கு முன் நாம் கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட சீன சொற்களை மீளாய்வு செய்ய வேண்டும்.

கிளிடஸ்......சரி நான் உங்களை பின்பற்றி பயிற்சி செய்வேன்.

கலை......சரி, கடந்த வகுப்பில் நாம் முக்கியமாக கிழமைகள் பற்றி சீன மொழியில் கற்றுக் கொண்டோம்.

கிளிடஸ்......சரி நாம் நினைவு செய்து பயிற்சி செய்ய போகலாமா?

கலை...... சரி நான் வினா தொடுக்கின்றேன். நீங்கள் விடைகளை சொல்லுங்கள்.
今           天           星      期    几?
ச்சின் தியன் சிங் ச்சி ஜி?
இன்று என்ன கிழமை?

கிளிடஸ்.........今         天          星       期    一
                           ச்சின் தியன் சிங் ச்சி யி.
இன்று திங்கள் கிழமை.

கலை........ 今         天           星      期    几?
                    ச்சின் தியன் சிங் ச்சி ஜி?
இன்று என்ன கிழமை?

கிளிடஸ்..........今           天           星       期      二
                              ச்சின் தியன் சிங் ச்சி அள்.
இன்று செவ்வாய் கிழமை.

கலை........今           天          星       期    几?
                     ச்சின் தியன் சிங் ச்சி ஜி?
இன்று என்ன கிழமை?

கிளிடஸ்........今           天         星      期      三
                          ச்சின் தியன் சிங் ச்சி சான்.
இன்று புதன் கிழமை.

கலை....... 今           天           星      期     几?
                     ச்சின் தியன் சிங் ச்சி ஜி?

கிளிடஸ்......今           天          星      期     四
                         ச்சின் தியன் சிங் ச்சி ஸ்
இன்று வியாழக் கிழமை

கலை....... 今         天          星       期    几?
                   ச்சின் தியன் சிங் ச்சி ஜி?

கிளிடஸ்........今          天           星     期     五
                          ச்சின் தியன் சிங் ச்சி வூ.
இன்று வெள்ளிக் கிழமை.

கலை...... 今           天          星      期     几?
                   ச்சின் தியன் சிங் ச்சி ஜி?

கிளிடஸ்........今           天           星      期     六
                           ச்சின் தியன் சிங் ச்சி லியூ.
இன்று சனிக் கிழமை.

கலை....... 今        天           星     期      几?
                   ச்சின் தியன் சிங் ச்சி ஜி?

கிளிடஸ்.......今         天           星      期    日
                         ச்சின் தியன் சிங் ச்சி ழி.
இன்று ஞாயிற்றுக் கிழமை. 

கலை........கிளிடஸ் இப்போது நினைவு பயிற்சி மூலம் சிங் ச்சி பற்றி கற்றுக் கொண்டீர்களா?

கிளிடஸ்......ஆம். கற்றுக் கொண்டுள்ளேன்.

கலை.......சரி, நாளுடன் தொடர்புடைய சொற்களை இன்றைய வகுப்பில் முக்கியமாக கற்றுக் கொள்வோம்.

கிளிடஸ்.......எனக்கு புரிந்தது. நீங்கங் சொல்லுங்கள்.

கலை......தமிழில் இன்று சீன மொழியில் 今天 ச்சின் தியென், தமிழில் நாளை சீன மொழியில் 明天மிங் தியன், தமிழில் நாளை மறுநாள் சீன மொழியில்后天ஹொ தியன்,தமிழில் நேற்று சீன மொழியில் 昨天ச்சோ தியன், தமிழில் நேற்று முன்தினம் சீன மொழியில் 前天ச்சியன் தியன்.

கிளிடஸ்.......கலை கொஞ்சம் மெதுவாக எளிமையாக சொல்லுங்கள். எனக்கு ஒரு முன்மொழிவு உண்டு.

கலை....சொல்லுங்கள்.

1 2