• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-30 15:36:23    
Shen Zhen நகரில் கல்வி பயிலும் அன்னிய மாணவர்கள்

cri

கல்வி பயிலும் அன்னிய மாணவர்கள்

Shen Zhen நகரில் உள்ள உயர் கல்வி நிலையங்களில், அன்னிய மாணவர்கள் பலர் கல்வி பயில்கின்றனர். இன்றைய நிகழ்ச்சியில், இம்மாணவர்கள், Shen Zhen நகரில் கல்வி கற்று, வாழும் நிலைமை பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

Badhe Utsab என்பவர், நேபாள நாட்டவர். தற்போது, Shen Zhen பல்கலைக்கழகத்தில் சீன மொழியை அவர் கற்றுக்கொள்கின்றார். தாம் Shen Zhen நகருக்கு வந்து, நீண்டகாலம் ஆகவில்லை என்றும், இந்நகரை தாம் நேசிப்பதாகவும் அவர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:

"Shen Zhen நகருக்கு நான் வந்து, 10 மாதங்கள் மட்டுமே ஆகின்றன. ஆனாலும், இங்கு, சீன நண்பர்கள் பலருடன் பழகுகின்றேன். அவர்களின் மூலம், சீனர்கள் அன்புள்ளம் கொண்டவர். மற்றவருக்கு உதவி அளிக்க அவர்கள் விரும்புகின்றனர் என்று அறிகிறேன். தற்போது, நான் மேசும் சீன மொழி அவ்வளவு நன்றாக இல்லை. வாழ்க்கையிலும் கற்றலிலும், இன்னல்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாதது. என் சீன நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவர்கள் எனக்கு செய்யும் உதவிகளால், நான் மனமுருகுகின்றேன். Shen Zhen நகரில் வாழ்வது, என் சொந்த வீட்டில் இருப்பது போலவே உணர்கின்றேன்" என்றார் அவர்.

மாணவர்களுக்கிடையிலான பரிமாற்றம்

தென் சீனாவின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள Shen Zhen நகர், சீனாவில் மிக முன்னதாக நிறுவப்பட்ட சிறப்பு பொருளாதார பிரதேசங்களில் ஒன்றாகும். கடந்த 30 ஆண்டுகளாக, அங்கு சமூக மற்றும் பொருளாதாரத்துறைகளில், பெரும் வளர்ச்சி காணப்பட்டுள்ளது. தற்போது, Shen Zhen நகரில், பத்து உயர் கல்வி நிலையங்கள் உள்ளன. 40க்கு அதிகமான நாடுகளின் சுமார் 500 மாணவர்கள் இந்த உயர் கல்வி நிலையங்களில் கல்வி பயில்கின்றனர். இம்மாணவர்கள் மேலும் கூடுதலான அறிவை பெற்றுக்கொள்ளும் வகையில், உயர் கல்வி நிலையங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, Shen Zhen நகரில் உள்ள Harbin தொழிற்துறை பல்கலைக்கழகத்தின் மேற்படிப்பு கழகம், சர்வதேசமயமாக்கத்தின் மாதிரிக்கிணங்க, பயிற்றுவித்தலை நடத்துகின்றது. அனைத்து பாடங்களிலும், ஆங்கில மொழி பாடநூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அன்னிய மாணவர்களின் மொழித் தடை நீங்கியுள்ளது. Shen Zhen பல்கலைக்கழகத்தில், சாதாரண வகுப்புகளைத் தவிர, சீன எழுத்து, சீன ஓவியம், சீனப் பாடல், Tai Chi Chuan எனப்படும் சீனப் பாரம்பரிய போர்க்கலை உள்ளிட்ட தனித்தன்மை வாய்ந்த பாடங்கள் மாணவர்களுக்காக திறந்து வைக்கப்படுகின்றன. மாணவர்கள் இப்பாடங்களைத் தெரிவு செய்யலாம்.

1 2