• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-30 15:36:23    
Shen Zhen நகரில் கல்வி பயிலும் அன்னிய மாணவர்கள்

cri

வாழ்க்கை ரீதியில், உயர் கல்வி நிலையங்கள், அன்னிய மாணவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கியுள்ளன. Shen Zhen நகரில் உள்ள Harbin தொழிற்துறை பல்கலைக்கழகத்தின் மேற்படிப்பு கழகத்தின் ஆசிரியர் Liang Qiu Ru அம்மையார் கூறியதாவது:

"அன்னிய மாணவர்களுக்கு தலைசிறந்த சேவையை வழங்குகின்றோம். எடுத்துக்காட்டாக, அன்னிய மாணவர்கள் தங்கும் விடுதியில், குளிர்ப்பதனப் பெட்டி, குளிரூட்டி, சமையல் அறை, கழிவு அறை ஆகியவை காணப்படுகின்றன. அவர்களின் உறைவிட வசதிகள், உள்ளூர் மாணவர்களின் உறைவிட வசதிகளை விட மேலும் தரமானவை" என்றார், அவர்.

Shen Zhen நகரில் கல்வி பயிலும் அன்னிய மாணவர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். இதனால், அவர்களின் வாழ்க்கை பின்னணி, மத நம்பிக்கை மற்றும் வாழ்க்கை பழக்க வழக்கங்கள் வெவ்வேறானவை. பிற நாடுகளின் பண்பாடு, பழக்க வழக்கம், மதம் ஆகியவற்றை மதிப்பதைக் கோட்பாடாகக் கொண்டு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மனநிறைவு தரும் சேவையை இந்நகரின் உயர் கல்வி நிலையங்கள் வழங்கியுள்ளன. எடுத்துக்காட்டாக, முஸ்லிம்களின் மத விழாவை முன்னிட்டு, இஸ்லாமிய நாடுகளின் மாணவர்கள் ஒன்று திரள்வதை இவ்வுயர் கல்வி நிலையங்களின் ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து, அவர்களுடன் விழாவைக் கூட்டாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். சீனாவின் விழா நாட்களில், சீன ஆசிரியர்கள், அன்னிய மாணவர்களுடன் கூட்டாக விழாவை கொண்டாடுகின்றனர். இதன் மூலம், ஆசிரியர்கள் மற்றும் சீன சக மாணவர்களின் பேரூக்கத்தை அன்னிய மாணவர்கள் உணர்ந்து கொள்கின்றனர்.

Waqas Anwar என்னும் பாகிஸ்தான் மாணவர், Shen Zhen நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் கணிணி அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையில் கல்வி பயில்கின்றார். அவர் செய்தியாளருக்கு கூறியதாவது:

"அன்னிய மாணவர்களுக்கு சேவை புரியும் ஆசிரியர்கள், பாகிஸ்தான் மாணவர்களின் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனம் செலுத்துகின்றனர். ஆண்டுதோறும் ரம்சான் திருநாளை முன்னிட்டு, அவர்கள் எங்களுக்கு விருந்து ஒன்றை அளிக்கின்றனர். இதர நாடுகளின் மாணவர்களின் தேவைகளை ஆசிரியர்கள் கருத்தில் கொள்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, அவர்கள் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா விருந்து அளிக்கின்றனர். தவிர, "புதிய மாணவர் வரவேற்பு விருந்து", "பட்டம் பெற்றோருக்கான வழி அனுப்பு விருந்து", "சீனாவின் சந்திர நாட்காட்டியின் படி, ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாட்டம்", "வசந்த விழா கொண்டாட்டம்" ஆகியவை நடத்தப்படுகின்றன. தவிர, "litchi பழம் விழாவுக்கான விருந்து" எமது பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடத்தப்படுகின்றது. இங்கு, எங்கள் வாழ்க்கை பலவிதமானது. வெளிநாட்டில் வாழ்வதினால் ஏற்படும் தனிமை உணர்வு எனக்கு இல்லை" என்றார், அவர்.

உண்மையில், வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை தீர்ப்பதில் அன்னிய மாணவர்களுக்கு உதவிடும் பொருட்டு, சீன ஆசிரியர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாண்டின் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு, அன்னிய மாணவர்களுக்காக, கொண்டாட்டத்தை Shen Zhen பல்கலைக்கழகம் நடத்தியது. தத்தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தி, பிறருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை இது மாணவர்களுக்கு வழங்கியது. மாணவர்கள் சீன மொழியில் தங்களது திறமைகளை அரங்கேற்றினர்.

இறுதியில், "நண்பர்" என்ற சீன மொழி பாடலை அவர்கள் கூட்டாக பாடி, சீன ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீதான உணர்வை தெரிவித்தனர்.

"நண்பர்கள் கையோடு கைகோர்த்து முன்னேறுகின்றனர்
அந்த நாட்கள் உருண்டோடி விட்டன
ஒரு கூற்று
ஒரு ஆயுள்
ஒரு ஆயுளின் நட்புறவு
ஒரு கோப்பை மது" என இப்பாடல் கூறுகின்றது.


1 2