• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-01 13:03:39    
சீனாவில் தேசிய இனவியல் ஆய்வு

cri

2008ம் ஆண்டில், சீனாவில் சர்வதேச விளையாட்டு விழாவான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் அதே வேளையில், மற்றொரு சர்வதேச விழாவும் நடைபெறும். உலகில், தேசிய இனவியல் வட்டாரத்தின் வல்லுநர்கள் அணிதிரளும் 15வது உலக தேசிய இனவியல் மாநாடு, இதுவாகும். சீனாவின் தேசிய இனவியல் ஆய்வு, சர்வதேச கல்வியியல் வட்டாரத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என இம்மாநாடு, சீனாவில் நடைபெறுவது பொருட்படுகின்றது.

தேசிய இனவியல் ஆய்வு, சீனச் சமூக அறிவியலின் ஒரு முக்கிய பகுதியாகும். கள ஆய்வுக்கும் தத்துவ ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இத்தேசிய இனவியல் துறை, ஒரு நாட்டின் சமூக வடிவத்தின் உருவாக்கத்துக்கு முக்கிய பங்காற்றுவதாகும். சீனாவின் தேசிய இனவியல் ஆய்வு, 19வது நூற்றாண்டின் இறுதியில் வெளிநாட்டிலிருந்து உட்புகுத்தப்பட்டது. தேசிய இனவியல் ஆய்வு, சீனாவில் நுழைந்ததற்குப் பிந்திய பத்து ஆண்டுகளுக்கு மேலான காலத்தில், சீனக் கிராமப்புற சமூக ஆய்வு, சீனாவின் சிறுபான்மைத் தேசிய இன சமூக வடிவ கள ஆய்வு ஆகியவற்றில் சீனாவின் தேசிய இனவியலாளர்கள் முக்கிய சாதனை பெற்றுள்ளனர். சீனாவின் தேசிய இனவியல் ஆய்வுக்கு அவர்கள் சிறந்த அடிப்படையிட்டனர்.

1949ம் ஆண்டில் நவ சீனா நிறுவப்பட்ட பின், சீனாவின் தேசிய இனவியல் ஆய்வு பரந்தளவில் முன்னேறியுள்ளது. சீனாவின் தேசிய இனங்களை இனம் கண்டறிவது, சீனாவின் சிறுபான்மை தேசிய இன சமூக வரலாற்று கள ஆய்வு உள்ளிட்ட, தேசிய இனவியல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. சீன சமூக அறிவியல் கழகத்தின் தேசிய இனவியல் மற்றும் மனிதகுலவியல் ஆய்வகத்தின் தலைவர் ஹங்ஸ்ன்யுங் பேசுகையில், குறிப்பாக, கடந்த நூற்றாண்டின் 70ம், 80ம் ஆண்டுகளில், சீனாவில் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்பு பணி நடைமுறைக்கு வந்த பின், சீனாவின் தேசிய இனவியலின் வளர்ச்சி புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது என்று எடுத்துக்கூறினார். அவர் கூறியதாவது:

"தற்போது, சீனாவின் தேசிய இனவியல் ஆய்வு, தனித்தன்மை வாய்ந்தது. பொருளாதாரத்தை வளர்ச்சியுறச்செய்யும் போக்கில், பண்பாடு, உயிரின வாழ்க்கைச்சூழல் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் சீனா மிகப்பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது. தவிரவும், இவ்வாராய்ச்சி, அரசு, தேசிய இனக் கொள்கையை வகுப்பதற்கு பல முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது" என்று அவர் சொன்னார்.
அப்போது, பொருளாதார வளர்ச்சி, சிறுபான்மை தேசிய இன பாரம்பரிய பண்பாட்டின் மீது வகிக்கும் செல்வாக்கு, நாடுகளுக்கிடை தேசிய இனத் தொடர்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து தேசிய இனவியல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மத்திய தேசிய இன பல்கலைக்கழகத்தின் தேசிய இனவியல் துறையின் பேராசிரியர் சாங் ஹங் யன் அறிமுகப்படுத்திக்கூறியதாவது:

1 2