• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-01 13:03:39    
சீனாவில் தேசிய இனவியல் ஆய்வு

cri

"சீன வரலாற்றையும் சிறுபான்மைத் தேசிய இனத்து பாரம்பரிய பண்பாட்டையும் ஆராய்வதன் மூலம், புதிய பண்பாட்டினை உருவாக்கி, நவீன மயமாக்கச் சமூகத்தை கட்டியமைக்கின்றோம். அதே வேளையில், வெளிநாடுகளுடன் தொடர்பை வலுப்படுத்த வேண்டும். சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு தேசிய இனங்களின் பண்பாடு, மதம், சமூகம், சந்தை ஆகியவற்றை புரிந்து கொள்வது தேவைப்படுகின்றது. இதனால் தேசிய இனவியலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, அவற்றை கள ஆய்வு செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.
கடந்த பல்லாண்டுகளாக, சீனாவின் அறிவியல் ஆய்வுக் கழகங்கள் மற்றும் நிறுவனங்களும், உயர் கல்வி நிலையங்களும் ஐயாயிரத்துக்கும் அதிகமான தேசிய இனவியலாளர்களைப் பயிற்றுவித்துள்ளன. சீனச் சமூக மற்றும் பொருளாதார வாழ்வின் பல துறைகளுக்குச் சென்று, தேசிய இனப் பண்பாட்டு மரபுச் செல்வத்தின் பாதுகாப்பு, சிறுபான்மைத் தேசிய இன வளர்ச்சி முதலியவற்றில் அதிக அளவு ஆய்வுப் பணிகளை இவர்கள் செய்துள்ளனர். எடுத்துக்காட்டாக கடந்த சில ஆண்டுகளில், நடைமுறைக்கு வந்துள்ள மேற்கு பகுதி பெரும் வளர்ச்சிப் பணியில், சீனாவின் தேசிய இனவியலாளர்கள், தேசிய இனத்து மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில் பண்பாடு, சமூக வளர்ச்சி ஆகியவை தொடர்பான நெடுநோக்குத் திட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் ஆய்வுக் கணிகள், யுன்னான் மாநிலம், சூ ச்சிங் மாநிலம், மற்றும் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் முதலியவற்றின் அரசுகளால் பயன்படுத்தப்பட்டன.

சீனாவின் தேசிய இனவியல் ஆராய்ச்சியும் பாட த்துறை உருவாக்கமும் மிகப் பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளன. இருப்பினும், பொதுவாக, அவை, பின்தங்கிய நிலையில் உள்ளன.

இதற்காக, சீன அரசின் தொடர்புடைய வாரியங்கள், அண்மையில் தேசிய நிலை, தேசிய இனவியல் ஆய்வுக் கழகத்தை நிறுவியுள்ளன. சீனத் தேசிய இன விவகாரக் கமிட்டியின் துணைத் தலைவர் யாங் ஸிங் துன் பேசுகையில், ஆய்வகத்தின் உருவாக்கம் ஆராய்ச்சியை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளுமாறு கல்வியியல் துறைக்கு வழிகாட்ட துணை புரியும் என்றார். அவர் கூறியதாவது:

"சீனாவின் தேசிய இனவியல் ஆய்வகம் நிறுவப்பட்டமை, சீனாவின் தேசிய இனவியல் ஆய்வு ஆற்றலின் ஒன்றிணைப்பை மேலும் விரைவுபடுத்தி, தேசிய இனப்பணியின் நடைமுறையாக்கத்துறைக்கும் ஆய்வுத் துறைக்குமிடையிலான பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தி, தேசிய இனவியலின் அடிப்படை ஆய்வின் புத்தம் புதிய நிலைமையை இடைவிடாமல் துவக்கி வைப்பது உறுதி. சீனாவின் தேசிய இனவியல் ஆய்வைச் செழுமையாக்கி வளர்ப்பதற்கு இது மேலும் வளமான, உறுதியான கல்வியில் அடிப்படை மற்றும் நடைமுறை அனுபவத்தை நிச்சயம் வழங்கும்" என்றார், அவர்.

தேசிய இனவியல் ஆய்வகத்தின் தலையாய கடமை, 2008ம் ஆண்டு உலக தேசிய இனவியல் மாநாட்டுக்கான ஆயத்தப் பணியைச் செவ்வனே கெய்வதாகும். யுன்னானின் குமின் நகரம், இதை ஏற்பாடு செய்து நடத்தும் என்று தெரிய வருகின்றது. இம்மாநாட்டுக்கு, சீனா, "மானிடவியல், சமூகம், வளர்ச்சி" என்ற கருப்பொருளை அளித்துள்ளது. மனித குலம், பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும் அதே வேளையில், பண்பாடு, உயிரின வாழ்க்கைச்சூழல் முதலியவற்றுடன் இசைவான வளர்ச்சியை நனவாக்க வேண்டும். அதாவது, மனிதரும் இயற்கையும் இணக்கமாக சகவாழ்வு நடத்த வேண்டும். தவிரவும், பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு, கூட்டு வளம் மற்றும் வளர்ச்சி என்பதை எவ்வாறு நனவாக்குவது என்ற பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனிக்க வேண்டும் என, முன்வைக்கப்பட்டது என்றார், அவர்.


1 2