முதலில் சீனப் பெருநில பகுதிக்கும் தைவானுக்குமிடையிலான உறவில் சுறுசுறுப்பான முன்முயற்சி காணப்பட்டுள்ளது. தைவான் கோமின்தான் கட்சித் தலைவர்களும் சீனப் பெருநில பகுதித் தலைவர்களும் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். செய்தியில் அடிக்கடி தைவான் நீரிணையின் இரு கரை உறவு சங்கம், தைவான் நீரிணை உறவின் நிதியம் பற்றி கேட்டோம். இது பற்றி விளக்கம் கூறலாமா என்று சில நேயர்கள் கேட்கின்றனர்.
தைவான் நீரிணை நிதியத்தின் முழு பெயர் தைவான் நீரிணை பரிமாற்ற நிதியமாகும். 1990ம் ஆண்டு நவெம்பர் திங்கள் 21ம் நாள் தைபேய் நகரில் இது நிறுவப்பட்டது. 1991ம் ஆண்டு மார்ச் திங்கள் 9ம் நாள் அதிகாரப்பூர்வமாக விவகாரத்தை கையாள துவங்கியது. இது இரு கரை உறவின் வளர்ச்சிக்கும், சீனப் பெருநிலப் பகுதி மீதான கட்டுப்பாட்டு கொள்கையை நடைமுறைபடுத்துவதும் மேற்கொள்ளப்பட்ட ஒரு வரலாற்று முயற்சியாகும். உடன்பிறப்புகளை பார்க்க சீனப் பெருநில பகுதி திரும்புவதற்காக 1987ம் ஆண்டு சேவையிலிருந்து ஓய்வு பெற்ற தைவான் படைவீரர்களுக்கு தைவான் அதிகார வட்டாரம் அனுமதி வழங்கியது. இதற்கிடையில் தொடர்பின்மை, விட்டுகொடுக்காமை, பேச்சுவார்த்தை நடத்தாமை என்ற கொள்கையை தைவான் அதிகார வட்டாரம் படிப்படியாக சரிபடுத்தியது. அத்துடன் அதிகாரம் படைத்த அரசு சாரா அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. சட்டபூர்வ பொறுப்பாளர் என்ற முறையில் நிதியத்தை அது நிறுவியது. அதிகார வட்டாரம் மக்கள் நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் நன்கொடை மூலம் நிதி திரட்டப்படும். தைவான் அதிகாரத்தின் சீனப் பெருப் நிலக் கமிட்டியின் அனுமதி பெற்று இரு கரைகளின் பரிமாற்றத்துடன் தொடர்புடைய விவகாரங்களை கையாள்வது அதன் முக்கிய கடமையாகும். தைவான் நீரிணை சங்கத்தின் முதல் தலைவராக குச்சன்பூ இருந்தார்.
"சீனாவுக்குச் சேவை"என்ற நோக்கத்துடன் தைவான் நீரிணை பரிமாற்ற நிதியத்தின் குறிக்கோளாகும். ஆகையில் தொடர்புகளை வளர்த்து இரு கரைகளின் உடன்பிறப்புகளின் நியாயமான உரிமைகளையும் நலனையும் பேணிகாத்து தைவானுடன் விவகாரங்களைப் பற்றி கலந்தாய்வு செய்ய சீன பெருநிலப் பகுதி உடன்பட்டுள்ளது. அத்துடன் 1991ம் ஆண்டு டிசெம்பர் திங்கள் 16ம் நாள் நீரிணை இரு கரை உறவு சங்கம் நிறுவப்பட்டது.
1 2
|