தைவான் நீரிணையின் இருகரை உறவு சங்கத்தின் பணியில் 4 முக்கிய நிகழ்ச்சிகள் உள்ளன. ஒன்று தைவான் தீவிலுள்ள அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிரமுகர்களுடனும் வெளிநாடுகளில் வாழ்கின்ற அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிரமுகர்களுடனும் தொடர்பு கொண்டு ஒத்துழைத்து அரசு சாரா ஆற்றலை வெளிக் கொணர்ந்து இரு கரைகளின் மூன்று நேரடிச் சேவைகளையும் விரைவுப்படுத்துவது. இரண்டு தைவான் நீரிணை கடல் பரப்பில் கள்ள கடத்தல் செய்வது கொள்ளையடித்தல் போன்றவற்றை ஒன்றுபட்டு கூட்டாக முறியடிப்பது பற்றி தைவான் நீரிணை நிதியத்துடன் விவாதிப்பது, மூன்று சங்கம் மூன்றாவது தரப்பின் கோரிக்கையை ஏற்று தைவான் நீரிணை கடல் பரப்பில் மீன் பிடிப்பு தொடர்பான சர்ச்சை, எதிரெதிர் தரப்பின் கட்டுப்பாட்டு இடங்களில் வசிப்பது மற்றும் இதர தொடர்புடைய பிரச்சினைகளை கையாள்வது குறித்து தொடர்புடைய தரப்புடன் இணைந்து தைவான் நிறுவனங்கள் அல்லது பிரமுகர்களுடன் கலந்தாலோசித்து தீர்வு காண்பது. நான்கு தாய்நாட்டில் முதலீடு, வர்த்தகம் மற்ற பரிமாற்ற அலுவல் பற்றிய கொள்கை, சட்ட விதிகள் பற்றி தைவான் தீவிலுள்ள நிறுவனங்களுக்கும் பல்வேறு வட்டார பிரமுகர்களுக்கும் தகவல் வழங்கி சேவை புரிவது. அதேவேளையில் நீரிணை இருகரை உறவு சங்கம் தைவானில் பண்பாடு, கல்வியியல், விளையாட்டு, அறிவியல் தொழில் நுட்பப் பரிமாற்றம் முதலிய தகவல்களை சீனப் பெருநிலப் பகுதிக்கு வழங்குகின்றது. தைவான் நீரிணையின் இருகரை உறவு சங்கத்தின் தலைவர் வுவாங் தோ ஹென். 1 2
|