• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-08 16:48:38    
ஒரு சாதாரண திபெத்தின குடும்பம்

cri

மே திங்கள் சிங்ஹாய்-திபெத் பீடபூமியில், வசந்த கால சூழ்நிலை இன்னும் உணரப்படவில்லை. கடும் குளிர் காற்றில், எமது செய்தியாளரின் கார், கிராமப்புறத்தின் சிறு பாதையில் ஒரு மணிநேரத்துக்கு மேல் ஓடிய பின், புல்வெளியின் ஆழப்பகுதியிலுள்ள குங் ஷி செங் வீட்டைச் சென்றடைந்தது.

சிங்ஹாய் ஏரி வடக்குக் கரையில் உள்ள புல்வெளியில் அவரது வீடு அமைந்துள்ளது. கடல்மட்டத்திலிருந்து 3000 மீட்டர் உயரத்தில் இப்புல்வெளி அமைந்துள்ளதால், இங்கு கடும் குளிர். மே திங்கள் ஆன போதிலும் ஆற்று மேற்பரப்பில் கனத்த பனிக்கட்டி உருகவில்லை. புல்வெளியிலும் ஒரே மஞ்சள் நிறம். கார் அவரது வீட்டின் வாசலில் நின்ற போது, விருந்தோம்பல்மிக்க வீட்டுத் தலைவர், கைகளில் ஹதா என்னும் பட்டுத்துணியை ஏந்திய வண்ணம் செய்தியாளர்களை வரவேற்றார்.

9 அறைகள் அடங்கிய இவ்வீடு, கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டது. வெளியில் பெரிய காற்று வீசினாலும், உள்ளே வெப்பமாக இருந்தது. 

அகலமான, ஒளிமயமான வரவேற்பு அறையில், உயரிய வீட்டுப் பயன்பாட்டு மின்கருவிகளும் புதிய ரக வீட்டுச் சாமான்களும் காணப்படுகின்றன. மேசையில் விதவிதமான சிற்றுண்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நகரத்தில் வாழ்கின்ற உணர்வு செய்தியாளர்களுக்கு ஏற்பட்டது. 57 வயதான குங் ஷி செங், புல்வெளி பற்றியும் தமது குடும்பத்தின் மாற்றம் பற்றியும் பேசினார்.

"எனது குடும்பம் 1998ம் ஆண்டில் குடியேறத் துவங்கியது. தலைமுறை தலைமுறையாக கூடாரங்களையே வீடாகக் கொண்டிருந்ததால், துவக்கத்தில் பழக்கமில்லை. இருப்பினும், குடியேற்ற வாழ்வின் நன்மையை இப்போது உண்மையில் உணர்ந்துள்ளோம். குடியேற்ற வாழ்வை மேற்கொண்ட பின், எங்கள் உணவுக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டது. வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது. முன்பு நாள்தோறும் மூன்று வேளை உணவுகளிலும் ஆடு மற்றும் மாட்டு இறைச்சி, கோதுமை பார்லி மாவு ஆகியவை முக்கியமாக இடம்பெற்றன. இப்பொழுதோ காய்கறிகள் மற்றும் இதர கோதுமை மாவு பொருட்களை சாப்பிடுகின்றோம்" என்று அவர் கூறினார்.

திபெத் இன மக்களின் உணவு வழக்கத்தின் படி, விருந்தினர்களுக்கு அதிக அளவில் ஆட்டு மற்றும் மாட்டு இறைச்சி வழங்கப்படும். ஆனால், இன்று மேசையிலுள்ள புத்தம் புதிய காய்களைக் கண்டு விருந்தினர்களுக்கு காரணம் புரியவில்லை. இதற்கான காரணம் பற்றி குங் ஷிங் செங் கூறினார். தமது வீடு, மாவட்டத்துக்கு வெகு தூரத்தில் இருப்பதால், காய்கறிகளை வாங்க வசதியில்லை. ஆட்டு வளர்ப்புக்குப் பயன்படும் கண்ணாடி வெப்பத் தொழுவத்தில் காய்களைப் பயிரிட்டதாக அவர் கூறினார். கோடைக்காலத்தில், ஆடுமாடுகள் அனைத்தும், கோடைக்கால புல் பண்ணையில் மேய்க்கப்படுகின்றன என்பதால் இவ்வாறு செய்ய முடிந்தது என்றார் அவர்.

வெப்பத் தொழுவத்தில் வளர்ந்த காய்கறிகளின் மிச்சம், கு ஷிங் செங்கின் அயலாளர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். வாழ்க்கை பழக்கமும், உணவு வழக்கமும் மாறி விட்டன. முன்பு ஆயர்களுக்கு எளிதில் ஏற்படும் குடல் மோய், எலும்பு மூட்டு அழற்சி முதலிய நோய்கள் குறைந்துள்ளன என்று அவர் கூறினார்.

1 2