• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-08 16:48:38    
ஒரு சாதாரண திபெத்தின குடும்பம்

cri

கு ஷிங் செங்கின் மருமகள் அப்போது சமையல் அறையில் உணவுப் பொருட்களைத் தயாரித்து கொண்டிருந்தார். அவ்வப்போது அவர் கூறினார்.

 

"கடந்த சில ஆண்டுகளில், புல்வெளியில் வாழும் எங்கள் ஆயர்களின் வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எங்கள் குடும்பம், மிகத் தொலைவிலுள்ள மலையில் வசித்திருந்தது. ஆயர்கள் இங்கும் அங்குமாக சிதறி வாழ்ந்தனர். இருப்பினும், அரசின் உதவி மூலமும், சொந்த முயற்சி மூலமும், அனைத்து ஆயர் குடும்பங்களும் குடியேறியுள்ளன. கடந்த ஆண்டு அரசின் நிதியுடவியுடன் மின்வசதி கிடைத்தது. குடிக்க குழாய் நீர் கிடைத்தது" என்றார்.

அவர் கூறியது போல், பல பத்து ஆண்டுகளுக்கு முன், புல்வெளியில் மோசமான காலநிலை, ஆயர்களின் சிதறிய வாழ்க்கை நிலை ஆகியவற்றினால், அவர்களின் வாழ்க்கை வசதிகள் குறைவு. பல இடங்களில், மின் வசதியும் குடி நீர் வசதியும் இல்லை. சில இடங்களில், உணவு உடை பிரச்சினையும் தீர்க்கப்படாமாலிருந்தது. இன்றோ, புல்வெளியிலுள்ள ஆயர்கள், தத்தமது வாழ்க்கை பழக்கங்களை மாற்றி, குடியேற்ற வாழ்க்கையைத் துவங்கியுள்ளனர். உள்ளூர் அரசின் உதவியுடனும் சொந்த முயற்சியுடனும், அவர்களின் வாழ்க்கைத் தரம் பெரிதும் மேம்பட்டுள்ளது என்றார், அவர்.

தம் வீட்டில், மொத்தம் 1200த்துக்கும் அதிகமான ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. அன்றி, 170க்கும் அதிகமான மாடுகளும் வளர்க்கப்படுகின்றன. கடந்த ஆண்டில், ஆடு மாடுகளை விற்பனை செய்ததன் மூலம் 60 ஆயிரம் யுவானுக்கு மேலான வருமானம் பெற்றுள்ளதாக கு ஷிங் செங் சொன்னார். போன ஆண்டில் 80 ஆயிரம் யுவானுக்கு மேல் செலவழித்து, மாவட்ட நகரத்தில், ஒரு செட் வணிக வீட்டை வாங்கினார். இந்நாட்களில் அவரது மனைவி, அங்கு வசிக்கின்றார். புல்வெளி ஆயர்கள், நகரத்தில் எவ்வாறு வாழ்கின்றனர் என்பதை அறிய, எமது செய்தியாளர்கள் கு ஷிங் செங்குடன் சேர்ந்து, புல்வெளியை விட்டு சென்றனர்.

கு ஷிங் செங்கின் வீடு, 80 சதுர மீட்டருக்கு மேலான நிலப்பரப்புடைய ஒருவீடாகும். அவர்களின் வீட்டுச்சாமான்கள், அன்றாட வாழ்க்கைப் பயன்பாட்டு பொருட்கள் எல்லாம், நகரவாசிகள் பயன்படுத்தும் பொருட்களிலிருந்து வேறுபட்டவையல்ல. வீட்டில் தொங்கவிடப்பட்டுள்ள தாங் கா வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகள் ஆகியவற்றிலிருந்து மட்டும், திபெத் இன மக்களின் வீடு என்பதை தெரிந்து கொள்ள முடியும். எங்களின் நோக்கத்தை அறிந்த பின் கு ஷிங் செங்கின் மனைவி செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:

"முன்பு புல்வெளியிலுள்ள மகளிர், மிகவும் இன்னலுடனும் சோர்வுடனும் வாழ்ந்தனர். குடியேற்ற வீடுகள் இல்லை என்பதால் ஒரு ஆண்டின் நான்கு காலாண்டுகளிலும், ஆடுமாடுகளைப் பின்பற்றி நடமாடினோம். ஒவ்வொறு நாளும் சமையல் செய்ய வேண்டும். கணவரையும் குழந்தைகளையும் கவனிக்க வேண்டும். எனவே, பல நோய்வாய்பட்டேன். இப்போது நிலைமை மாறி விட்டது. அகலமான ஒளிமயமான வீடுகளில் வசிக்கிறோம். அன்றி, குளிர்பதனப்பெட்டி போன்ற உயரிய மின்கருவிகளையும் பயன்படுத்துகின்றோம். இவ்வளவு வளமான வாழ்க்கை நடத்த முடியும் என முன்பு கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை" என்று அவர் கூறினார்.


1 2