• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-11 16:42:44    
நெஞ்சம் மறப்பதில்லை

cri

நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழப்பதில்லை...

அற்புதமான ஒரு திரையிசைப்பாடல். இந்தப்பாடல் ஒலிக்கிம் திரைப்படம் கூட மிக அழகான ஒரு காதல் கதையை வெள்ளித் திரையில் நமக்காக அரங்கேற்றியது. இங்கே நெஞ்சம் என்று சொல்லும்போது, நாம் மனது என்று கூறும் அந்த உருவமற்ற ஒன்றையே குறிப்பிட்கிறது. அதேவேளை, நெஞ்சு வலி என்று சொல்லும்போது, அது இதயத்தோடு தொடர்புடையது என்பது நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள். இருவரின் பார்வையும் ஒன்றாகி இதயங்கள் இடம் மாறின, காதல் மலர்ந்தது. காதல் வயப்பட்ட அனுபவமுள்ளவர்களுக்கு இது நன்றாகவே புரியும். இன் இதயம் அவளிடம், அவள் இதயம் என்னிடம் என்று காதலை கவிதைத்தனமாகக் கூறுவார்கள். ஒருவேளை காதல் தோற்றாலோ, கசந்து விட்டாளோ, அதனால் ஏற்படும் வலியை, இதயத்தில் கையை வைத்து மனசு வலிக்கிறது என்று சோகமாக சொல்வதை நாம் கேட்டிருக்கலாம். ஆக மனது, இதயம், நெஞ்சம் இவற்றை ஒன்றோடு ஒன்று குழப்பிப் பேசியே நாம் பழகிவிட்டோம்.

இதயம் என்பது நமது உடலின் இயக்கத்துக்கு இன்றியமையாதது. ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தி, உயிர்வாயுவை உடலுக்கு பயனுள்ளதாக்கி, உயிர் இருக்கிறதா இல்லையா என்பதையே தனது துடிப்பை வைத்து நிர்ணயிக்கச்செய்யும் முக்கியமான உடலுறுப்பு இதயமாகும். அதேவேளை மனித உடலின் தலைமையகம் என்று சொல்லப்படும் மூளையில்லாமல், எதுவும் இல்லை. உடலின் அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்தும் தலைமைச்செயலகம் மூளையாகும்.

இதயத்திற்கும் மூளைக்கும் ஏன் முடிச்சு போடுகிறேன் என்று ஒருவேளை யோசித்தால், உங்களுக்கு என் பாராட்டுக்கள். மனசு, நெஞ்சம் என்றெல்லாம் நால் சொல்லும் அந்த உருவமற்ற ஒன்றை, மூளையின் நினைவுகளே உருக்கொடுக்கின்றன. இந்த நினைவுகள் என்பது முற்றிலும் மூளையோடு தொடர்புடையவை. அப்படியிருக்க இதயத்தில் ஒரு கையை வைத்தபடி நெஞ்சம் மறப்பதில்லை என்று பாடுவது சரிதானா? அல்லது ஒருவேளை இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தில் சீர்படுத்துவது தவிர, சில நினைவுகளைத் தேக்கி வைக்கும் திறனும் இருக்கிறதா?

ஒரு உண்மைச் சம்பவத்தை உங்களுக்கு இப்போது கூறுகிறேன்.

1 2