ஷாங்காயில் வசிக்கும் வூ சியாவ்ஷென்ஒரு காலத்தில் தனிமை விரும்பி, அதிகம் மக்களிடத்தில் பழக மாட்டார். ஆனால் தற்போது கார் ஓட்டுவதில் ஆர்வம், பங்குச் சந்தையில் ஈடுபாடு, இணையத்தில் உலா அவ்வளவு ஏன் மது கூட குடிக்கத் துவங்கியுள்ளார்.
அவரது கணவர் கூட நேற்று இல்லாத மாற்றம் என்னது? என்று யோசிக்கும் அளவுக்கு அவரது பழக்க வழக்கங்களில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காரணம் என்ன?
காரணம் என்ன என்பதுதான் முக்கியம் என்றாலும், அதை இப்போதைக்கு விட்டுவிடுவோம். எப்போதிலிருந்து இந்த மாற்றம் என்பதை முதலில் அறிந்துகொள்வோம். தற்போது 52 வயதாகும் வூ சியாஷென் ஒரு இதய நோயாளி. 2005ம் ஆண்டில் கணவரோடு சென்யாங்கிற்கு பயணமாகச் சென்றிருந்தார். இந்தப் பயணத்தின்போது வூ திடீரென சுகவீனம் அடைய ஷென்சோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமையைக் கண்ட மருத்துவர்கள் அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். 23 வயதுமிக்க ஒரு நபரின் இதயம் அப்போது கிடைக்க. சரியான நேரத்தில் வூவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, அவர் உயிர் பிழைத்தார். இல்லாதபட்சம், இன்றைக்கு வூ உலகில் இல்லை என்று கூறுகிறார் குவோ பிங்சியுங். 36 பேர் கொண்ட மருத்துவர் குழு, 6 மணி நேரம் நீடித்த இந்த் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டது. சிகிச்சை முடித்த 33 நாட்கள் கழித்து வீடு திரும்பினார் வூ.
அறுவை சிகிச்சை முடித்து மருத்துவமனையில் கண்விழித்தபோது அவ்வளவு அதிகமான வலியேதும் இல்லை என்று குறிப்பிடும் வூ, புதிய இதயத்தை பெற்றபின் புதுத்தெம்பும், பலமும் கொண்டவராக உணர்வதாகக் கூறுகிறார். அவரது மகன் தனது தாயின் மாற்றங்களைக் கவனித்தபின், நாளுக்கு நாள் அவர் இளமையாகி வருவதாக கூறுகிறார். ஒரு பேத்தியும் உள்ள வூ சியாவ்ஷென், தற்போது உற்சாகமாக கார் ஓட்டவும், பங்குச் சந்தையில் சில பங்குகளை வாங்கியும் விற்றும் பணம் பார்ப்பதிலும், இணையதளத்தில் உலா வருவதுமாக இருப்பதைக் கண்டு அவரது கணவர் சு சிந்குவா, சில சமயம் இவர் தனது மனைவிதானா என்ற உணர்வு ஏற்படுவதாக வேடிக்கையாக குறிப்பிடுகிறார்.
அறிவியலர்கள் ஏற்கனவே இதயம் என்பது வெறுமனே ஒரு காற்றடிக்கும் பம்ப் மட்டுமே அல்ல என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதயத்திற்கு ஒரு வகை நினைவ்ய் ஆற்றல் இருப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஒருவேளை அதனால்தானோ என்னவோ இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் வூ சியாவ்ஷெனிடம் இத்தகைய மாற்றங்கள். 1 2
|