• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-13 16:02:58    
சோப்பு 7

cri

"நான் சொன்ஸ்... இதத்தான் அந்தக் கீழ்த்தரமானவன் சொன்னான்."

"எனக்குத் தெரியாது. இன்னொரு சோப் நீங்க வாங்கினா, அவளுக்கு நல்லாத் தேச்சு குளிப்பாட்டி, கூடத்துல வச்சி கும்பிடுங்க. உலகம் முழுவதும் அமைதியா இருக்கும்."

"நீ எப்படி இப்படிப் பேசலாம்? இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? நீ சோப் போடறதில்லேன்னு..."

"எல்லாச் சம்பந்தமும் இருக்கு. இது அந்தப் பரிவான பொண்ணுக்காகத்தான் வாங்கிளீங்க. அதனால அவளையே தேச்சுக் குளிப்பாட்டுங்க. எனக்கு இது போடத் தகுதியில்லே. எனக்கு வேண்டாம். அவளோட அழகுல நான் பங்கு போட வேணாம்."

"எப்படி இந்த மாதிரி எல்லாம் பேசுறே? ஸுமின் தடுமாறினார். அவருக்கு வியர்த்துக் கொட்டியது. ஸுவே செங் குத்துச் சன்ணை பயிற்சி எடுக்கும் போது இப்படித்தான் வியர்க்கும். ஒரு வேளை உணவு ரொம்பவும் காரமோ! நீங்க பொம்பளைங்க எல்லாம்."

"பொம்பளைங்களுக்கு என்ன வந்தது? ஆம்பளைங்களை விட நாங்க எவ்வளவோ மேலே, நீங்க ஆம்பளைங்க பதினெட்டு, பத்தொன்பது வயசு மானவிகலைத் திட்டுவீங்க. பதினெட்டு, பத்தொன்பது வயசு பிச்சைக்காரிகளை புகழ்ந்து தள்ளுவீங்க. என்ன அவிங்கமான மனசு! சே! தேய்ச்சுக் குளுப்பாட்டணுமாம். வேண்டியதுதான்!"

"பேசுறதுப் பாரேன். எவ்வளவு கீழ்த்தரமான பேச்சு."

"ஸு மின்" இடி முழக்கம் போல் ஒரு குரல் வெளியில் இருட்டில் இருந்து கேட்டது.

"தாவோ துங்? நீங்கள... இதோ வந்துட்டேன்."
அவருக்குத் தெரியும். ஹோ தாவோ துங்கின் கர்ச்சிக்கும் குரல் மிகவும் புகழ்பெற்றது. புதிதாக விடுதலை பெற்ற கிரிமினல் போல உற்சாகமாக பதில் குரல் கொடுத்தார்.

"ஸுவே செங், சீக்கிரம். விளக்கை ஏத்தி, ஹோ மாமாவை வசிப்பு அறைக்கு கூட்டிட்டுப் போ."

ஸுவே செங் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி, தாவோ துங்கை மேற்குப் புறமாக இருந்த ஒரு அறைக்கு அழைத்துக் கொண்டு போனான். அவர்களுக்குப் பின்னாலேயே புவெய் புவானும் சென்றார்.

1 2