"மன்னிக்கணும். உங்களை வரவேற்க வாசலுக்கு வரலை." அவருடைய வாய் நிறைய சாதத்துடன் ஸுமின் வந்து, கைகளைச் சேர்த்து கோர்த்தபடி வணங்கினார்.
"எங்களோட எளிமையான வணவை சாப்பிடுறீங்களா?"
"இல்லை, நாங்க சாப்பிட்டாச்சு." வெய் யுவான் முன்னே வந்து வணக்கம் தெரிவித்தார். "நாங்க இந்த ராத்திரி நேரத்துல அவசரமா வந்ததுக்குக் காரணம், ஒழுக்க இலக்கியச் சங்கத்தின் பதினெட்டாவது கட்டுரை—கவிதைப் போட்டி. நாளைக்கு பதினேழாம் தேதி இல்லே!"
"என்னது! இன்னிக்கு பதினாறாம் தேதியா?" ஆச்சரியமாகக் கேட்டார் ஸுமின்.
"என்ன நாபக மறதி பாருங்க உங்களுக்கு!" தாவோ துங் ஓங்கிப் பேசினார்.
"இன்னிக்கி ராத்திரியே பத்திரிகை அலுவலகத்துக்கு ஏதாவது எழுதி அனிப்பணும். அப்போதான் நாளைக்கு அச்சாகும்."
"நான் ஏற்கனவே கட்டுரைக்கு தலைப்பு எழுதி வச்சிருக்கேன். சரியா இருக்கா பாருங்க." தாவோ துங் பேசிக் கொண்டே தனது கைக்குட்டைத் துணியில் இருநது ஒரு துண்டுத்தாளை எடுத்து நீட்டினார். 1 2
|