கிளிடஸ்.......கலை கடந்த வகுப்பில் நிறைய சொற்களையும் வாக்கியத்தையும் கற்றுக் கொண்டேன். எனக்கு கொஞ்சம் குழப்பமாகிவிட்டது. இந்த வகுப்பில் நாம் புதிய சொற்களை கற்றுக் கொள்வதற்கு முன் நாம் ஏற்கனவே கற்றுக் கொண்ட சீன சொற்களை பயிற்சி செய்யலாமா?
கலை.........பிரச்சினையில்லை. நாம் கொஞ்சம் மெதுவாக சீன மொழியை கற்றுக் கொள்ளலாம். நீள வாக்கியங்களை கற்றுக் கொள்ளும் போது குறிப்பாக இதில் கவனம் செலுத்த வேண்டும்.
கிளிடஸ்.......ஆமாம். இன்றைய வகுப்பில் நான் கற்றுக் கொண்ட நியன், யுயூ, ழ், சின் ச்சி, சியன் நியன், ச்சோ தியன் போன்ற சொற்களை தனித்தனியாக வாக்கியத்தில் சேர்த்து பயிற்சி செய்யலாம்.
கலை........உங்கள் யோசனைகளை ஏற்றுக் கொள்கின்றேன். முதலில் நாள் மற்றும் ஆண்டு சொற்களை மீளாய்வு செய்வோம்.
கிளிடஸ்.......வழக்கம் போல நீங்கள் முதலில் சொல்லுங்கள். நான் உங்களை பின்பற்றுகின்றேன்.
கலை...... சரி நான் வினாதொடுக்கிறேன். நீங்கள் விடை சொல்லுங்கள். 今 天 星 期 几? ச்சின் தியன் சிங் ச்சி ஜி? இன்று என்ன கிழமை?
கிளிடஸ்.........今 天 星 期 一 ச்சின் தியன் சிங் ச்சி யி. இன்று திங்கள் கிழமை.
கலை........ 昨 天 星 期 几? ச்சோ தியன் சிங் ச்சி ஜி? நேற்று என்ன கிழமை?
கிளிடஸ்.......... 昨 天 星 期 二 ச்சோ தியன் சிங் ச்சி அள். நேற்று செவ்வாய் கிழமை.
கலை........ 明 天 星 期 几? மிங் தியன் சிங் ச்சி ஜி? நாளை என்ன கிழமை?
கிளிடஸ்........ 明 天 星 期 三 மிங் தியன் சிங் ச்சி சான். நாளை புதன் கிழமை.
கலை....... 后 天 星 期 几? ஹொ தியன் சிங் ச்சி ஜி? நாளை மருநாள் என்ன கிழமை.
கிளிடஸ்...... 后 天 星 期 四 ஹொ கியன் சிங் ச்சி ஸ் நாளை மறுநாள் வியாழக் கிழமை
கலை....... 前 天 星 期 几? ச்சியன் தியன் சிங் ச்சி ஜி? நேற்று முன்தினம் என்ன கிழமை
கிளிடஸ்........ 前 天 星 期 五 ச்சியன் தியன் சிங் ச்சி வூ. நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை.
கலை...... 今 天 星 期 几? ச்சின் தியன் சிங் ச்சி ஜி? இன்று என்ன கிழமை
கிளிடஸ்........今 天 星 期 六 ச்சின் தியன் சிங் ச்சி லியூ. இன்று சனிக் கிழமை.
1 2
|