• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-14 09:10:38    
சீனாவில் செல்லிடப்பேசியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை

cri

இவ்வாண்டின் ஏப்ரல் திங்கள் இறுதி வரை, சீனாவில் தொலைபேசியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 77 கோடியைத் தாண்டியுள்ளது. இதில் செல்லிடப் பேசியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 41 கோடியே 60 லட்சத்துக்கு மேலாகும். நிலைத் தொலைபேசி இணைப்பைப் பெறுவோர் எண்ணிக்கை 36 கோடியை மிஞ்சியுள்ளது.

சீனத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மே 21ஆம் நாள் வெளியிட்ட புதிய புள்ளிவிபரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 4 திங்கள் காலத்தில், செல்லிடப் பேசியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, திங்கள்தோறும் சராசரியாக 58 லட்சத்து 40 ஆயிரம் அதிகரித்து வந்துள்ளது. அதன் மொத்த எண்ணிக்கை 41 கோடியே 66 லட்சத்து 44 ஆயிரத்தை எட்டியுள்ளது. நிலைத் தொலைபேசியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 36 கோடியே 9 லட்சத்து 41 ஆயிரமாகும்.

இதற்கிடையே, குறுந் தகவல் அனுப்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது. முதற்காலாண்டில், குறுந் தகவல்களின் எண்ணிக்கை, 13225 கோடியாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 46.5 விழுக்காடு அதிகரித்தது.

100 பேருக்கு 27 நிலைத் தொலைபேசிகள் வீதமும், 100 பேருக்கு 30.3 செல்லிடப்பேசிகள் வீதமும் உள்ள நிலை சீனாவில் ஏற்பட்டுள்ளது.

சீன மக்கிளின் சராசரி ஆயுட்காலம்

சீனாவில், ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 71 ஆண்டுகள். பெண்களின் சராசரி ஆயுட்காலம் 74 ஆண்டுகள். உலக சுகாதார அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வழங்கியுள்ளது.

உலகில், சன்மாலினொ நாட்டைச் சேர்ந்த ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 80 வயது. இது உலகில் முதலிடம் பெறுகிறது. ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில்,ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 79 வயதை எட்டியுள்ளது. கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் 78 வயதையும் பிரிட்டன் ,பிரான்சு,ஜெர்மனி ஆகிய நாடுகளில் 77 வயதையும் அடைந்துள்ளது.

1 2