• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-14 09:10:38    
சீனாவில் செல்லிடப்பேசியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை

cri

ஜப்பானிய பெண்களின் சராசரி ஆயுட்காலம் 86 ஆண்டுகளாகும் .உலகில் இது முதலிடம் பிடிக்கிறது. பிரான்சு உள்ளிட்ட நாடுகளில் மகளிர் சராசரியாக 84 வயது வரை வாழ்கின்றனர். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பெண்களின் சராசரி ஆயுட்காலம் முறையே 81 வயதும் 80 வயதும் ஆகும்.

உணவு என்பது, நீண்ட ஆயுளுக்கு முக்கிய காரணியாகும் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

கிராமிய மக்கள் தொகையைத் தாண்டியுள்ள நகர மக்கள் தொகை

உலகின் நகர மக்கள் தொகை, மே 23ஆம் நாளன்று முதல் முறையாக கிராமிய மக்கள் தொகையைத் தாண்டியுள்ளது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலகளவில், நகர மக்கள் தொகையை விட கிராமிய மக்கள் தொகையே கூடுதலாக இருந்து வந்தமை, குறிப்பிடதக்கது.

மே 23ஆம் நாளன்று, உலகின் நகர மக்கள் தொகை, 330 கோடியே 39 லட்சத்து 92 ஆயிரத்து 253 ஆகும். கிராமிய மக்கள் தொகை 330 கோடியே 38 லட்சத்து 66 ஆயிரத்து 404 ஆகும். நகர மக்கள் தொகை, கிராமிய மக்கள் தொகையை முதன் முறையாக தாண்டியுள்ளதை மே 23ந்தேதி குறிக்கின்றது.

தற்போது, உலகில் சுமார் 100 கோடி நகரவாசிகள், ஏழைச் சேரிகளில் வசிக்கின்றனர். அங்கு, அடிப்படை வாழ்க்கை வசதிகள் பற்றக்குறையாக உள்ளன. பல இடங்களில் தூய்மையான குடி நீரும் கழிவறைகளும் இல்லை.

இதனால் உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 16 லட்சம் மக்கள், மாண்டு மடிக்கின்றனர்.


1 2