• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-15 15:07:01    
கொரிய இனக் கிராமத்தில் புதிய தோற்றம்

cri

வட கிழக்குச் சீனாவில் ஜி லின் மாநிலத்தின் சியேள தைன் நகரில் சின் லி என்னும் கிராமத்தில் கொரிய இனத்தவர்கள் ஒன்றுகூடி வாழ்கின்றனர். கிராமத்தின் துவக்க முனையில், கிராமத்துக்கு நேராகச் செல்லும் சுத்தமான சிமேந்து பாதை தென்படுகின்றது. பாதையின் இரு மருங்கிலும் Poplar மரங்கள் வரிசையாக நிற்கின்றன.

இக்கிராமத்தில், வாழ்க்கை வளம் பற்றி கிராமவாசிகள் அதிகப்படியாக பேசுகின்றனர். அவர்கள் வளமடைந்ததற்கு, வெளிநாடுகளில் வேலை செய்வது முக்கிய காரணமாகும். கிராமத்தின் பொறுப்பாளர் ப் தே சாங் பேசுகையில், தற்போது கிராமத்தில் மொத்தம் 489 குடும்பங்கள் உள்ளன. சுமார் ஆயிரத்து 800 கிராமவாசிகள் இங்கு வாழ்கின்றனர். கடந்த நூற்றாண்டின் 70ம் ஆண்டுகளிலேயே, கொரிய மொழி தெரிந்தமை, வெளிநாட்டில் உற்றார் உறவினர்கள் இருப்பது ஆகிய மேம்பாடுகளினால், பலர் வெளிநாட்டுக்குச் சென்று வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர் என்று கூறினார்.

"சீர்திருத்த மற்றும் வெளிநாடட்டுத் திறப்புப் பணி துவங்கியதும், சிலர் வெளிநாட்டுக்குச் செல்லத் தொடங்கினர். துவக்கத்தில், தென் கொரியாவில் பணி புரிந்துள்ளனர். காலம் செல்லச் செல்ல அவர்களால் மேலதிகமான வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்க்க முடிந்தது. 1997ம் ஆண்டுக்குப் பின் 70 விழுக்காட்டு கிராமவாசிகள் வெளிநாடுகளில் பணி புரிந்துள்ளனர்" என்றார், அவர்.
கூட்டம் கூட்டமாக கிராமவாசிகள் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளனர். பின் பணம் அனுப்பும் அட்டைகள் கிராமத்துக்கு வந்தன. கிராமத்தில் தங்குவோர் தத்தமது விவேகத்தையும ஆற்றலையும் எழுப்பி, பயிரிடுதல் மற்றும் வளர்ப்புத் தொழிலை இணைந்து வளர்த்துள்ளனர். இதன் விளைவாக, அவர்களின் குடும்பங்களும் கிராமமும் மென்மேலும் வளமடைந்துள்ளன. இக்கிராமத்தின் பொறுப்பாளர் சாங் ரேங் ஸியேங் இது பற்றி அறிமுகப்படுத்தியதாவது:

"வளர்ப்பு மற்றும் பயிரிடுதலில் புதிய வளர்ச்சி காணப்பட்டுள்ளது. தொழில் பயிர்களை சாகுபடி செய்துள்ளோம். பன்றிகளையும் வாத்துக்களையும் வளர்த்துள்ளோம். உரிய வெப்பத்தில் "சிங் டின்" என்னும் இவ்வாத்துக்கள் ஆண்டின் நான்கு காலாண்டுகளிலும் முட்டை போட முடியும்" என்றார்.
வளமடைந்துள்ள கிராமவாசிகளின் உறைவிட வசதியும் வாழ்க்கைச் சூழலும் நாளுக்கு நாள் மாறி வருகின்றன. கிராமவாசி சிங் ப்ங் சங் வீடு, முழுக்க முழுக்க கொரிய இனப் பாணியில் அலங்கரிக்கப்பட்ட போதிலும், வீட்டுச் சாதனங்கள் நவீன மானவை, சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தன்மை வாய்ந்தவை, செய்தியாளருடன் துணைக்கு செல்லும் அதே வேளையில், தமது வீட்டின் கட்டமைப்பு பற்றி அவர் அறிமுகப்படுத்தி கூறியதாவது:

"இவ்வீட்டின் பரப்பு, 130 சதுர மீட்டர். நில வெப்படம் காரணமாக அடுப்பு படுக்கை தேவையில்லை. சமையல் அறை, குளியல் அறை, படுக்கை எல்லாம் வெப்பமடைகின்றன" என்று அவர் கூறினார்.
சின் லி கிராமத்தில் எங்கும்,தொலைபேசி, கம்பி தொலைக்காட்சி மோட்டார் சைக்கிள் ஆகியவை காணப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில், கணிணி என்ற சாதனமும், கிராமவாசிகளின் வீட்டில் நுழைந்துள்ளது. செள யுன் லுங் என்பவர், லியெள நிங் பல்கலைக்கழகத்தில் சொந்த செலவில் இரண்டு ஆண்டுகாலம் கணிணி நுட்பத்தைக் கற்றுக்கொண்டார். எனவே, கணிணியை வாங்க தம்முடன் துணைக்குச் செல்லுமாறு கிராமவாசிகள் பலர் அவரை வேண்டிக்கொண்டார். அவர் கூறியதாவது:

1 2