• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-15 15:07:01    
கொரிய இனக் கிராமத்தில் புதிய தோற்றம்

cri

"1997ம் ஆண்டு முதல் நாற்பது ஐம்பது கணிணிகளை வாங்கினோம். அடிப்படையில், கணணி இருக்கும் குடும்பங்கள், அகன்ற அலைவரிசை சேவைக்கு விண்ணப்பித்துள்ளன" என்று அவர் சொன்னார்.
இன்று வாழ்க்கை நிலை சீரடைவதுடன், சின் லி கிராமத்தினர்கள் பண்பாட்டு வாழ்க்கை மீது ஆர்வம் காட்டியுள்ளனர்.

நேயர்களே! இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, செங் லிங் கிராமவாசிகள் தட்டிய மேள ஒலியாகும். இக்கிராமத்தின் முதியோர் சங்கம் நடத்திய நடன அரங்கேற்றம், இதுவாகும்.

ஆடிப்பாடி மகிழ்வது என்பது, இக்கிராமத்தில் புதுமையல்ல. எந்நேரத்திலும் இது காணப்படலாம். 20 ஆண்டுகளுக்கு முன் இம்முதியோர் சங்கம் நிறுவப்பட்டது. இப்போது இதில் 200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். இச்சங்கத்தின் உருவாக்கம் பற்றிக்குறிப்பிடுகையில், கிராமத்தின் இணைஞர்களில் பெரும்பாலானோர், வெளியூரில் வேலை செய்கினறனர். வீட்டில் தங்கும் முதியோர்கள், எவ்வாறு தத்தமது முதுமைக்காலத்தைக் கழிப்பது என்பது கிராம ஊழியர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய பிரச்சினையாகியுள்ளது. எனவே முதியோர் சங்கம் உருவாக்கப்பட்டது என்று சங்கத்தின் தலைவர் யின் குவாங் ஹெள கூறினார். அவர் கூறியதாவது:

"முதியோர் அணி திரளும் நோக்கம் என்ன? அவர்கள் ஒன்றுகூடி விளையாடுவதற்காகும். ஆடுவது, பந்தாட்டம் போன்றவை, இவ்விளையாட்டுக்களாகும்" என்றார் அவர்.
முதியோர் விளையாட்டு அறையின் சுவரில், 2007ம் ஆண்டு சங்க நடவடிக்கைகள் பற்றிய ஏற்பாட்டு அட்டை ஒன்றை எமது செய்தியாளர் கண்டார். 12 திங்கள் ஒவ்வொன்றிலும் நடவடிக்கைகள் உண்டு. பந்தாட்டப்போட்டி, சதுரங்க போட்டி, ஓவிய போட்டி, சுற்றுலா, சிரிய ரக விளையாட்டுப் போட்டி, ஆடல்பாடல் விழா போன்றவை இதில் அடங்கும். முதியோர் சுறுசுறுப்பாக இவற்றில் கலந்து கொண்டுள்ளதாக, முதியோர் லியு ப்ன் சுவென் எமது செய்தியாளிடம் தெரிவித்தார்.

"கிராமவாசிகள் வளமான வாழ்க்கையினால் மன நிம்மதி அடைந்துள்ளனர். இக்கிராமத்தில் வாழ்வோருக்கு தாம் ஒரு பெரும் குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. ஜனநாயகமயமாக்க நிர்வாகம், இப்பெரும் குடும்பத்தில் கிராமவாசிகளால் பெரிதும் பாராட்டப்படும் ஒன்று. அரசியல் அலுவல், விவகாரம், நிதி அலுவல் ஆகியவை வெளிப்படையாக்கப்படுகின்றன என்பது, ஜனநாயகமயமாக்க நிர்வாகமாகும்" என்று கிராமவாசி செள யுன் லுங் எடுத்துக்கூறினார்.

கிராமத்தின் நுழைவாயிலில், விவகார வெளிப்படை அட்டை ஒன்றும் காணப்படுகின்றது. ஓய்வு நேரத்தில் இதைப் பார்த்து, கிராமத்தில் ஏற்படும் சிறிய பெரிய விஷயங்களைப் புரிந்து கொள்ளலாம் என்றார், அவர்.


1 2