• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-20 08:52:10    
சோப்பு 8

cri

ஸுமின் மெழுகுவர்த்தியை உயர்த்திப்பிடித்து தாளை விரித்து, எழுத்துக் கூட்டி வாசித்தார். "இந்த உலகை புத்துயிரூட்டவும், நமது தேவியப் பண்பைப் பேணிக் காக்கவும் கன்பூசியஸ் இலக்கியங்களையும் மென்ஷியஸ் அன்னையின் வழிபாட்டையும் ஊக்கப்படுத்த உத்தரவு பிறப்பிக்கும்படி ஜனாதிபதியை கெஞ்சிக் கேட்டுக் கொண்டு நாடு முழுவதன் சார்பாக ஒரு கட்டுரை சமர்ப்பிக்கிறோம். நல்லா இருக்கு.. நல்லா இருக்கு. ஆனா, தலைப்பு கொஞ்சம் நீளமா இல்லே?"

"அதனால என்ன பரவாயில்லே" தாவோ துங் உரத்த குரலில் பதிலளித்தார். "நான் கணக்கு போட்டுப் பார்த்துட்டேன். விளம்பரத்துக்கு கொடுக்க அதிகச் செலவு ஆகாது சரி. கவிதைத் தலைப்பு என்ன?"

"கவிதைக்குத் தலைப்பு?" திடீரென ஸுமின் மிகவும் மரியாதையோடு, "நான் ஒரு தலைப்பு நினைச்சி வச்சிருக்கேன். பரிவான மகள் எப்படி? இது ஒரு உண்மைக் கதை. அவளைப் பாராட்டியே ஆகணும். இன்னைக்கு மெயின் ரோட்டுல."

"ஓ... வேணாம். அது வேணாம்." வெய் யுவான் அவசரமாக இடைமறித்தார். கைகளை ஆட்டியபடியே ஸு மின்னை பேச விடாமல் தடுத்தார். "நானும் அவளைப் பார்த்தேன். அவ இந்தப் பக்கத்தைச் சேர்ந்தவள் இல்லை. அவ பேசுறது எனக்குப் புரியலே. நான் பேசுனது அவளுக்குப் பிரியலே. அவ எங்கிருந்து வந்தவன்னு எனக்குத் தெரியலே. அவள் பரிவானவள் ன்னு எல்லோரும் சொல்றாங்க. ஆனா கவிதை எழுத முடியுமான்னு நான் கேட்டப்போ அவள் தலையைக் கலுக்கிவிட்டாள். அவளால கவிதை எழுத முடியுமானால் நல்லது."

1 2