• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-20 08:52:10    
சோப்பு 8

cri

"ஆனால் விசுவாசமும்... பக்தியும்தான் ரொம்ப முக்கியம். அவளால கவிதை எழுத முடியாட்டா பரவாயில்லே."

"அது சரியில்லே. உண்மை வேற மாதிரி." வெய் யுவான் கைகளை உயர்த்தியபடியே ஸுமின்னை நெருங்கி, அவரைப் பிடித்து உலுக்கித்தள்ள முற்பட்டார். "அவளால கவிதை எழுத முடியுமானால்தான் நல்லா இருக்கும்."

"இந்தத் தலைப்பே வைக்கலாம்" ஸுமின் அவரை ஒதுக்கித்தள்ளினார். "ஒரு விளக்கத்தைச் சேர்த்து அச்சுக்குக் கொடுக்கலாம். முதலில, இது அவளைப் பெருமைப்படுத்தறதா இருக்கும். இரண்டாவதா, சமுதாயத்தை விமர்சிக்கவும் நான் இதைப் பயன்படுத்தலாம். இந்த உலகம் எவ்வளவு மாறிப் போச்சு, பாருங்க. கொஞ்ச நேரம் பார்த்துக் கிட்டே இருந்தேன். ஒரு பய கூட சல்லிக்காக தரலே. இப்படியா ஈவிரக்கம் இல்லாமல் போகும் ஜனங்களுக்கு..."

"சுய்யோ, ஸு மின்!" மீண்டும் முன்னே விரைந்தார் வெய் புவான். "மொட்டைத் தலையன்களை எல்லாம் சன்னியாசின்னு சொல்லப் பார்க்கிறீங்க. என்விட்ட பணம் இல்லாததுனால நான் அவருக்கு எதுவும் கொடுக்கலை."

"பதறாதீங்க வெய் யுவான்" அவரை ஸு மின் மீண்டும் ஒதுபுறமாகத் தள்ளினார்.

"நீங்க வேணும்னா விதிவிலக்கா இருக்கலாம் நான் சொல்லி முடிக்க விடுங்க, அவங்களைச் சுத்தி பெரிய கும்பலே இருந்தது. மரியாதை இல்லாம அவங்களை கேளியும் கிண்டலும் பண்ணிக்கிட்டு இருந்தது. கீழ்த்தரமான ரெண்டு பேரு ரொம்ப மோசமா நடந்துக் கிட்டாங்க. அவங்கள்ல ஒருத்தன்" ஒ பூல். "நீ ரெண்டு சோப்பு வாங்கினா, அவளுக்கு நல்லாத் தேச்சுக் குளுப்பாட்டு. அதன் விளைவு மோசமா இருக்காதுன்னான். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க."


1 2