கிளிடஸ்.......கலை கடந்த வகுப்பில் நாம் முக்கியமாக கற்றுக் கொண்ட சொற்களை கொண்டு வாக்கியங்களை உருவாக்கி பயிற்சி செய்தோம். இந்த வகுப்பில் என்ன கற்றுக் கொள்ள போகிறோம்.
கலை.......கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட சொற்களை கொண்டு வாக்கியங்களை மீளாய்வு செய்த பின் சீன மொழியைக் கற்றுக் கொள்ளும் உணர்வு உங்களுக்கு அதிகரித்துள்ளதா?
கிளிடஸ்......ஆமாம். சீன மொழியை கற்றுக் கொள்ளும் உணர்வு அதிகரித்துள்ளது. ஓய்வு நேரத்திலும் வெளியே பொருட்களை வாங்கும் போதும் சீன மொழியில் முடிந்த வரை பயன்படுத்தி பேசிவருகிறேன். அதிக முன்னேற்றம் அடைந்துள்ளேன்.
கலை.......ஆமாம். நான் கவனித்துள்ளேன். ஒவ்வொரு வகுப்பு முடிவடைந்த பின் பாட நூலை வாங்கி மீண்டும் மீண்டுநி பல முறை பயிற்சி செய்தீர்கள். நல்ல மாண்வர். சரி நான் ஏற்கனவே முந்தைய ஆண்டு கடந்த ஆண்டு, கடந்த ஆண்டுக்கு அடுத்த ஆண்டு போன்ற நேரம் குறிக்கும் சொற்களை கற்றுக் கொண்டோம். வழக்கம் போல கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட சொற்களை பயன்படுத்தி வாக்கியங்களை மீளாய்வு செய்ய போகலாமா?
கிளிடஸ்.......போகலாமே.
கலை.......சரி நான் முதலில் பேசுகின்றேன்.
கிளிடஸ்.......உங்களை பின்பற்றி மாணவராக சீன மொழியை பயிற்சி செய்கின்றேன்.
கலை........ வாக்கியங்களை மீளாய்வு செய்வதற்கு முன் வாக்கியத்துடன் தொடர்புடைய ஒரு சொல் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்.
கிளிடஸ்.......அது என்ன சொல்.
கலை.........நா என்பதுதாகும். இது மா என்று பொருள். வினாவும் போது இது அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றது. சரி வாக்கியங்களை உருவாக்குவோம்.
கலை................. 前 年 是 哪 年? ச்சியன் நியன் ஷ் நா ஆண்டு?
கிளிடஸ்......... 前 年 是 哪 年? ச்சியன் நியன் ஷ் நா ஆண்டு? கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு எந்த ஆண்டு
கலை.......... 前 年 是 2004年 ச்சியன் நியன் ஷ் 2004 நியன்.
கிளிடஸ்...... 前 年 是 2004年 ச்சியன் நியன் ஷ் 2004 நியன். கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு 2004ம் ஆண்டு.
கலை......... 2006 年 11 月 5 号.
கிளிடஸ்........ 2006 年 11 月 5 号. 2006 நியன் 11 யூயே வூ ஹௌ.
கலை.........கடந்த ஆண்டின் அக்டோபர் திங்கள் 26ம் நாள்.
கிளிடஸ்........去 年 10 月 26 日 ச்சியூ நியன் 10 யூயே 26 ழ்.
கலை....... அடுத்த ஆண்டு ஜுலை திங்கள் 17ம் நாள்.
கிளிடஸ்....... 明 年 7 月 17 日。 மிங் நியன் 7 யூயே 17 ழ்.
கலை........இவ்வாண்டின் மே திங்கள் 23ம் நாள்.
கிளிடஸ்.......今 年 5 月 23 日. ச்சின் நியன் வூ யூயே 23 ழ்.
கலை........ அடுத்த ஆண்டு மார்ச் திங்கள் 14ம் நாள்
கிளிடஸ்......明 年 3 月 14 日 மியன் நியன் 3 யூயே 14 ழ்.
கலை........ 昨 天 星 期 几? ச்சோ தியன் சிங் ச்சி ஜி? நேற்று என்ன கிழமை?
கிளிடஸ்.......... 昨 天 是 星 期 二 ச்சோ தியன் ஷ் சிங் ச்சி அள். நேற்று செவ்வாய் கிழமை.
1 2
|