• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-20 09:14:24    
தமிழ் மூலம் சீனம் பாடம் 85

cri

கலை........ 今          天          是     2006 年           11          月       19 日.
                     ச்சின் தியன் ஷ் 2006 நியன் ஷ்யி யூயே 19 ழ்.

கிளிடஸ்.......今           天         是     2006 年             11        月       19 日. 
                          ச்சின் தியன் ஷ் 2006 நியன் ஷ்யி யூயே 19 ழ்.
இன்று 2006ம் ஆண்டு நவம்பர் திங்கள் 19ம் நாள்.

கலை........ 明            年          是    那    年?
                     மியன் நியன் ஷ் நா நியன்?

கிளிடஸ்......明          年           是 2007   年.
                       மியன் நியன் ஷ் 2007 நியன்.
அடுத்த ஆண்டு 2007ம் ஆண்டு. 

கலை........கிளிடஸ் தேதி, ஆண்டு, மாதம் பற்றி வினவும் போது சீன மொழியில் கேட்பது பிரச்சினை இல்லையே.

கிளிடம்........ஆமாம். பிரச்சினை இல்லை என்று நினைக்கிறேன்.

கலை.......அப்படியிருந்தால் நாம் நேரம் பற்றி கூடுதலான சொற்களை கற்றுக் கொள்ளலாம்.

கிளிடஸ்............சொல்லுங்கள்.

கலை........தமிழில் கடந்த என்பது செய்த அல்லது கழிந்த விடயம் அல்லது தேதியை குறிக்கின்றது.

கிளிடஸ்......ஆமாம். இதில் சந்தேகம் எதுவும் இல்லை.

கலை.......ஆனால் சீன மொழியில் இரண்டு சொற்களை ஒரே பொருளில் இருக்கின்றன. இந்த சொல் ஷாங் என்பதாகும். இந்த ஷாங் நேரம் குறிக்கும் போது கடந்த என்று பொருள்படுகின்றது. திசையை குறிக்கும் போது மேல் என்று பொருள்படுகின்றது.

கிளிடம்.......எனக்கு புரிந்தது. அப்படியிருந்தால் கடந்த வாரம் குறிப்பிடும் போது ஷாங் க யூயே என்று சொல்லலாம்.

கலை.......ஆமாம். திசையை குறிக்கும் போது ஷாங் மேல் குறிக்கின்றது. அதாவது தமிழில் மேசையின் மேல் என்பது சீன மொழியில் சோ ஷாங் என்று பொருள்கின்றது.

கிளிடஸ். ....அப்படியிருந்தால் அதற்கு எதிர் சொல் சியா என்பதாகும்.

கலை.......ஆமாம். சியா சீனாமொழியில் அடுத்த அல்லது கீழ் என்று பொருள்கின்றது. மேசையின் கீழ் பற்றி குறிப்பிடும் போது சீன மொழியில் சோ சியா என்று பொருள்படுகின்றது.
நேரம் குறிப்பிடும் போது சியா க ய்யூக்கு அடுத்த மாதம் என்று பொருள்படுகின்றது.

கிளிடஸ்.......இது கொஞ்ச கஷ்டம். எனக்கு குழப்பமாகிவிட்டது.

கலை.......சரி பரவாயில்லை. வாக்கியத்தில் பயிற்சி செய்தால் கஷ்டம் இல்லை.

கிளிடஸ்......அப்படியிருந்தால் நாம் வாக்கியத்தில் இதை பயன்படுத்துவோம்.

கலை....... 上           个 月 . 
                     ஷாங் க யூயே.

கிளிடஸ்....... 上        个   月 .
                          ஷாங் க யூயே.
கடந்த மாதம்.

கலை....... 上           个   星      期     六
                     ஷாங் க சிங் ச்சி லியூ

கிளிடஸ்..... 上          个   星      期     六
                         ஷாங் க சிங் ச்சி லியூ
கடந்த சனிக் கிழமை.

கலை...... 下      个     月        5     号
                    ஷா க யூயே வூ ஹோ.

கிளிடஸ்.........下    个    月         5        号
                           ஷா க யூயே வூ ஹோ.
அடுத்த மாதம் 5ம் நாள்.

கலை...... 下       个 星     期     一     是   几      号?
                  சியா க சிங் ச்சி யி ஷ் ச்சி ஹோ?

கிளிடஸ்........ 下      个  星      期    一    是   几     号?
                          சியா க சிங் ச்சி யி ஷ் ச்சி ஹோ?
அடுத்த வாரத்தின் முதல் கிழமை எந்த நாள்

கலை........நேயர்களே. தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நிறைவடையும் நேரமாகிவிட்டது.

கிளிடஸ்......வகுப்புக்குப் பின் பயிற்சி செய்யுங்கள். மறக்க வேண்டாம்.


1 2