• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-20 16:26:07    
தைவான் உடன்பிறப்புகளுக்கு உற்சாகத்துடன் சேவை புரியும் ஷாங்காயின் தைவான் விவகார அலுவலகம்

cri

கடந்த சில ஆண்டுகளில், ஷாங்காய் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சியுடனும், தைவான் நீரிணை இருகரைகளுக்கிடை பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதுடனும், தைவான் உடன்பிறப்புகள் சீனப் பெருநிலப்பகுதியில் முதலீடு செய்யும் போது முதலில் தெரிவு செய்யும் இடமாகவும், மிக அதிகமான முதலீடு செய்யும் இடமாகவும், ஷாங்காய் மாநகர் மாறியுள்ளது. ஷாங்காய் மாநகரில் நீண்டகாலமாக வாழும் தைவான் உடன்பிறப்புகள், வேலை மற்றும் வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சந்திப்பது தவிர்க்கப்பட முடியாது. அப்போது, தங்களுக்கு எப்போதுமே உற்சாகத்துடன் சேவை புரியும் ஷாங்காய் மாநகரின் தைவான் விவகார அலுவலகத்தை அவர்கள் முதலில் கருத்தில் கொள்கின்றனர்.

அண்மையில், சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர் அனைவரும், நீண்டகாலமாக ஷாங்காயில் வாழ்க்கை நடத்தி வேலை செய்யும் தைவான் உடன்பிறப்புகளாவர். அவர்களின் உரைகளை, ஷாங்காய் மாநகராட்சித் தலைவர்களும் ஷாங்காயின் தைவான் விவகார அலுவலகத்தின் முக்கிய பொறுப்பாளர்களும் உணர்வுபூர்வமாக கேட்டறிந்து, பதிவு செய்தனர். ஷாங்காயிலுள்ள தைவான் முதலீட்டுத் தொழில் நிறுவனச் சங்கத்தின் தலைவர் லி மௌ செங் கூறியதாவது—

பரிமாற்றம்

"ஷாங்காய்க்கு வருவது, சரியான முடிவு என்று நான் கருதுகின்றேன். இன்று வரை, நான் சந்தித்த பல்வகை இன்னல்களும், நான் கேள்விபட்ட தைவான் வணிகர்கள் சந்தித்த இன்னல்களும் உரிய நேரத்தில் தீர்க்கப்பட்டுள்ளன. ஷாங்காயின் தைவான் விவகார அலுவலகத்தின் அதிகாரிகள் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் பரபரப்பாக இருந்த போதிலும், தைவான் நண்பர்களின் ஆலைகளுக்கு அடிக்கடி சென்று பணிகளுக்கு வழிகாட்டுகின்றனர். இத்தகைய கவனம் மற்றும் அரவணைப்பினால், குடும்பத்தின் இன்பத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம்" என்றார் அவர்.
மேற்கூறிய கலந்துரையாடல் கூட்டம் ஆண்டுக்கு ஒரு முறை ஷாங்காயில் நடைபெறுகிறது.

யாங்ச்சி ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள ஷாங்காய், சீனாவில் மிகப் பெரிய வணிக மற்றும் நாணய மையமும், மேற்கு பசிபிக் வட்டாரத்தில் முக்கியமான சர்வதேசத் துறைமுக நகரமும் ஆகும். வசதியான போக்குவரத்து, வளர்ந்த தகவல் தொடர்பு, பாரம்பரியத்துடன் இணையும் நவீனப் பண்பாடு முதலியவை, மேலும் அதிகமான தைவான் உடன்பிறப்புகளின் பார்வையை ஈர்த்துள்ளன. 2006ஆம் ஆண்டின் இறுதிவரை, மொத்தம் 6000க்கு மேலான தைவான் முதலீட்டு திட்டப்பணிகளுக்கு ஷாங்காய் மாநகராட்சி ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 1600 கோடி அமெரிக்க டாலருக்கு அதிகமான தைவான் முதலீடும் உட்புகுத்தப்பட்டுள்ளது. தற்போது, ஷாங்காயில் நீண்டகாலமாக வாழும் தைவான் உடன்பிறப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

1 2