• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-20 16:26:07    
தைவான் உடன்பிறப்புகளுக்கு உற்சாகத்துடன் சேவை புரியும் ஷாங்காயின் தைவான் விவகார அலுவலகம்

cri

பல ஆண்டுகளாக, தைவான் உடன்பிறப்புகளுக்கு சேவை புரியும் சிறப்பு வாரியம் என்ற முறையில், தைவான் வணிகர்களுக்கு நல்ல முதலீட்டுச் சூழலை உருவாக்குவதிலும், முதலீடு செய்வதிலான இன்னல்களை உரிய நேரத்தில் தீர்ப்பதிலும், ஷாங்காயின் தைவான் விவகார அலுவலகம் பெருவாரியான பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த அலுவலகத்தின் துணைத் தலைவர் கு ஹோங் ஹுய் கூறியதாவது—

"கடந்த சில ஆண்டுகளில், தைவான் உடன்பிறப்புகளுக்கு பல்வகை சேவைகளை வழங்கவும், அவர்களுக்கு நல்ல முதலீட்டுச் சூழலை உருவாக்கவும், தாய்நாட்டில் முதலீடு செய்ய அவர்களை ஈர்க்கவும் நாங்கள் அரும் பாடுபட்டு வருகின்றோம்" என்றார் அவர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், தைவான் வணிகர்கள் செய்த சுமார் 1200 புகார் வழக்குகளை ஷாங்காயின் தைவான் விவகார அலுவலகம் ஏற்று விசாரணை நடத்தியுள்ளது. தைவான் வணிகர்கள் முன்வைத்த சில நியாயமான கோரிக்கைகளும் தீர்க்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களில் சிலர் நிதித் திரட்டுவதில் சந்தித்த இன்னல்கள் குறித்து, ஷாங்காயின் தைவான் விவகார அலுவலகம், பல தரப்புகளுடன் ஒருங்கிணைந்து, வங்கியுடன் சேர்ந்து, அவர்களுக்கு 500 கோடி யுவான் கடனை வழங்கியது.

தைவான் வணிகர்கள் ஷாங்காயில் மேலும் நன்கு வளர்வதற்கு துணை புரியும் பொருட்டு, 4 கோடி யுவான் மதிப்புள்ள ஒரு கட்டிடம், ஷாங்காயிலுள்ள தைவான் முதலீட்டுத் தொழில் நிறுவனச் சங்கத்துக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
தவிர, கடந்த சில ஆண்டுகளில், மேலும் அதிகமான தைவான் உடன்பிறப்புகள் ஷாங்காயில் முதலீடு செய்து, பணி புரிந்து, வாழ்க்கை நடத்துகின்றனர். அதனுடன், அவர்களின் குழந்தைகள் ஷாங்காயில் கல்வி பயில்வது தொடர்பான பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையில் ஷாங்காயின் தைவான் விவகார அலுவலம் பெரும் கவனம் செலுத்தி, பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, தைவான் உடன்பிறப்புகளின் குழந்தைகளுக்கான பள்ளி ஷாங்காயில் சிறப்பாக நிறுவப்பட்டுள்ளது.

தைவான் உடன்பிறப்புகளின் குழந்தைகளுக்கான பள்ளி

ஷாங்காயிலுள்ள வாழ்க்கை மற்றும் முதலீட்டுச் சூழல் பற்றி, தைவான் உடன்பிறப்புகளும் மனநிறைவு அடைகின்றனர்.

மேலும், அவர்களின் சட்டப்பூர்வ உரிமை மற்றும் நலனைப் பேணிக்காக்கவும், அவர்களுக்கான உபசரிப்பு மற்றும் சேவைப் பணியை செவ்வனே செய்யவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஷாங்காயிலுள்ள தைவான் உடன்பிறப்புக்கான உபசரிப்பு மற்றும் சேவை மையத்தை ஷாங்காயின் தைவான் விவகார அலுவலகம் நிறுவியுள்ளது. தமது தொழில் நிறுவனம் ஷாங்காயில் வளர்ச்சி காண்பதற்கும், தாம் ஷாங்காயில் தடையின்றி இன்பமாக வாழ்க்கை நடத்துவதற்கும், இந்த அலுவலகத்தின் உதவி காரணமாகும் என்று ஷாங்காயிலுள்ள தைவான் உடன்பிறப்புகள் அனைவரும் கூறியுள்ளனர். இதைக் கேட்டு இந்த அலுவலகத்தின் துணைத் தலைவர் கு ஹோங் ஹுய் மகிழ்ச்சியுடன் கூறியதாவது—

"எங்கள் அலவலகத்தை தமது வீடாக அவர்கள் கருத விரும்புகின்றனர். இன்னல்களைச் சந்திக்கும் போது எங்கள் அலுவலகத்துக்கு அவர்கள் வந்து உதவி நாடுகின்றனர். எங்களுக்கு இது ஊக்கமும் ஆகும் என்று நான் கருதுகின்றேன். பயன் தரும் பணிகளின் மூலம் தைவான் உடன்பிறப்புகளுக்கு செவ்வனே சேவை புரிந்து, எங்கள் அலுவலகத்தை சொந்த வீடாக அவர்கள் உணரச் செய்ய வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகின்றோம்" என்றார் அவர்.


1 2