• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-21 10:29:49    
ஸ்ச்சான் மாநிலத்தின் ராட்சத பாண்டா (பகுதி2)

cri

கலை......பாருங்கள் நீங்கள் கேட்பதற்கே களைப்படைகிறீர்கள். நாங்கள் தினந்தோறும் இந்த சிக்கலான வேலையைச் செய்யும் போது மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் குழப்பமும் வருத்தமும் நிறைந்த சூழ்நிலை ஏற்படும். அல்லவா?

கிளீ........நீங்கள் சொன்னது சரிதான். இந்த வேலை பொதுவாக கடினமானது. ஆகவே பொறுப்புடனும் பொறுமையுடனும் வேலை செய்ய வேண்டும்.

கலை..... இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் கடிதங்களை கையாளும் நடைமுறை பற்றி குறிப்பிட்டோம். கடிதங்களை எப்படி கையாள்வது என்பதை நேயர்கள் அறிந்து கொள்ள துணை புரிவது எங்கள் நோக்கமாகும்.

கிளீ........கலை உங்கள் நோக்கம் தெளிவானது. வெரிதாஸ் வானொலியில் பணிபுரிந்த போது இதே போன்ற வேலை செய்த அனுபவத்தை பெற்றேன். உங்கள் பணி நிச்சயம் கடினம்.

கலை........ஆகவே கடிதங்களில் காணப்பட்ட குறைகளை நாங்கள் உடனடியாக திருத்த வேண்டும். நேயர்கள் எங்கள் குறைகளை குற்றம் கூறுவதற்குப் பதிலாக உடனடியாக அதை எங்களுக்குச் சுட்டிக்காட்டி எமது பணிகளை நாங்கள் மேலும் செவ்வனே செய்வதற்கு உதவுவது ஆக்கப்பூர்வமான மனப் பான்மையாகும்.

கிளீ........ஆமாம். செவ்வனே செய்வது எங்கள் அனைவரின் கூட்டு நோக்கமாகும்.

கலை......பொது அறிவுப் போட்டி வேலை பற்றி மீண்டும் திரும்ப வேண்டும். ராட்சத பாண்டா என்னும் பொது அறிவு போட்டிக்கான பரிசு வழங்குவது பற்றிய பரிந்துரை பெயர் பட்டியல் இதுவரை இன்னும் அனுப்பாத நேயர் மன்ற பொறுப்பாளர்கள் சீக்கிரமாக பெயர் பட்டியலை அனுப்புங்கள். அனுப்பும் போது பெயர் பட்டியலில் நேயர் எண்களை குறிப்பிட கண்டிப்பாக மறக்க வேண்டாம். அவசரமாக ஏதேனும் தகவல் தேவைபட்டால் என்னுடைய செல்லிட பேசி மூலம் என்னை தொடர்பு கொள்ளலாம்..

கிளீ.......உங்கள் செல்லிட பேசி எண் -0086-13671038003 என்பதாகும்.

கலை.......ஆமாம் இதை பயன்படுத்தி என்னை அழைக்கலாம்.

கிளீ......சரி நண்பர்களே இதுவரை நீங்கள் கேட்டது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியாகும். அடுத்த முறை மீண்டும் சந்திப்போம்.

கிளீ.......வணக்கம் நேயர்களே.


1 2