• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-21 10:17:48    
யேல் பல்கலைக்கழகக் குழுவின் பெருஞ்சுவர் பயணம்

cri

அடுத்து, யேல் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மைய அரங்கான பறவைக்கூடு அரங்கைப் பார்வையிட்டனர். அப்போது, கட்டிடவியல் துறை பேராசிரியரான மிகெல்லி, கடந்த 40 ஆண்டுகளில் அத்தகைய சிறப்பான கட்டுமானம் ஒன்றை கண்டதில்லை என பாராட்டினார். பெய்ஜிங்கின் மொழி மற்றும் பண்பாட்டுப் பல்கலைக்கழகத்தில் சீன மொழியைப் பயின்று, தற்போது யேல் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் பணியாற்றும் நெட் என்பவர், பறவைக் கூடு அரங்கில் நடைபெற உள்ள 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்கவிழாவைக் கண்டுகளிக்க விருப்பம் தெரிவித்தார். அத்துடன், அந்நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டு விற்பனையாகும் இடம் பற்றியும், உடனடியாக கேட்டறிந்தார். சீனப் பயணம் முடிந்தாலும், சீனாவில் பெற்ற அனுபவங்கள் யாவும், யேல் பல்கலைக்கழகக் குழுவினரால் எப்போதும் மறக்கவியலாது என்பதில் ஐயமில்லை.

செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல ஆட்கள் தேர்வு

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் செவ்வாய் கிரகத்துக்கு ஓடத்தை அனுப்ப உள்ளது. இந்த ஓடத்தில் செல்லும் விண்வெளி வீரர்களைத் தேர்வு செய்யும் பணி, விரைவில் நடக்க உள்ளது.

ஐரோப்பிய விண்வெளி மையம், ரஷிய மருத்துவ மற்றும் உயிரியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் ஆறு பேரில் இருவர், ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விண்வெளி ஓடத்தின் தொழில்நுட்பத் திறனைச் சோதிக்கும் வகையில், இதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விண்வெளி ஓடத்தில் மருத்துவ ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள், பல நாட்கள் தங்கி இருப்பர்.

250 கிலோ எடையைக் குறைத்த அமெரிக்கர்

அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கல் ஹெபர்ன்கோ என்பவர், உடல் பருமன் மிகுந்தவர். அவரது மொத்த உடல் எடை, 450 கிலோகிராம். அண்மையில், தனது மொத்த எடையிலிருந்து 250 கிலோ எடையைக் குறைத்துச் சாதனை புரிந்துள்ளார். இதை யொட்டி, கடந்த ஏப்ரல் 18ஆம் நாள் நியூயார்க்கில் அவருக்கு விருது வழங்கப்பட்டது.


1 2