சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த பணியிலிருந்து விலகிய உய்கூர் இன பேராசிரியை ழயிகன் ஹஸ்மு தம் நண்பர்களுடன் இணைந்து, படிப்பைப் பாதியில் நிறுத்திய 1000க்கு அதிகமான வறிய மாணவர்கள், பள்ளிக்கு திரும்புவதற்கு உதவி அளித்தார். எனவே, "அன்புள்ள தாய்" என குழந்தைகள் அவளை பாராட்டுகின்றனர்.

ழயிகன் ஹஸ்மு, சிங்கியாங் எண்ணெய் இயல் கல்லூரியின் ஒரு துணை பேராசிரியையாக இருந்தார். பணியிலிருந்து விலகிய பின், முதுமைக்கால வாழ்வை நடத்தி இன்புறலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. தமது பகுதியில் வறுமையினால், பல குழந்தைகள், பள்ளிக்குப் போக முடியவில்லை. சிலர், கூடாத செயலில் ஈடுபட்டதும் உண்டு என்பதை தற்செயலாக அவர் கண்டுள்ளார் என்பதே, இதற்குக் காரணம். 1995ம் ஆண்டு ஒரு நாள், காய்கறிகளை வாங்க, அவர் காய்கறி சந்தைக்குச் சென்று கொண்டிருக்கையில், குழந்தைகள் அழும் குரலைக் கேட்டார். இரண்டு குழந்தைகள், யாரோ ஒருவரின் பணத்தைத் திருடியதால், சிலர் அவர்களைக் குற்றஞ்சாட்டித் திட்டிக்கொண்டிருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய பின், ழயிகன் ஹஸ்மு அவ்விரண்டு குழந்தைகளையும் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
வீட்டில், குழந்தைகள் சுத்தமான ஆடைகளை அணிந்து, சூடான உணவுகளைச் சாப்பிட்டனர். பணத்தைத் திருடிய காரணம் பற்றி அவர் கேட்டார். குடும்ப வறுமையினால், தம் படிப்பைப் பாதியில் நிறுத்த வேண்டி ஏற்பட்டது. வாழ்க்கைக்காக பணத்தைத் திருடாமல் இருக்க முடியாது என்று குழந்தைகள் காரணம் கூறினர். இவ்விஷயம், ழயிகன் ஹஸ்முவை அதிரச் செய்தது. அவர் கூறியதாவது:
"அந்நாளிரவு முழுவதிலும் நான் நன்கு தூங்கவில்லை. தாய் என்ற முறையில் நானும் குழந்தையை வளர்த்துள்ளேன். ஆனால், இன்றைய விஷயத்தை நினைத்ததும், எனக்கு மிகவும் கவலை. இவ்விரண்டு குழந்தைகள் பராமரிக்கப்படாமல் இருக்கும் நிலைமை தொடரக்கூடாது. அவர்கள் கல்வியறிவை பெற வேண்டும். பணமின்றி பள்ளிக்குப் போக முடியாமல், வீதிகளில் அலைந்து திரிந்து திருடி கொள்ளையடிக்க வேண்டி ஏற்படும் நிலையிலுள்ள அநேக குழந்தைகள் சமூகத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு தாய் அன்பும் ஆதரவும் இல்லை. நான் ஒரு தாய். தாயின் அன்பை அவர்களுக்கு அளிக்கும் பொறுப்பு எனக்கு உண்டு" என்றார், அவர்.

ஆழ்ந்து யோசித்த பின், ழயிகன் ஹஸ்மு, ஒரு முடிவு எடுத்தார். அதாவது, இரண்டு குழந்தைகளை தம் வீட்டிலேயே வைத்து, தாமே அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது, இம்முடிவாகும். இரண்டு குழந்தைகள் விரைவாக புதிய வாழ்க்கைக்கு இசைவாகி, படிப்பில் உற்சாகம் மிகுந்தவர்களாயினர். இது, ழயிகன் ஹஸ்முவை மகிழச்செய்தது. இவ்விஷயம் விரைவாகப் பரவியது. சுற்றுப்புறங்களிலுள்ளவர்கள், அடுத்தடுத்து ழயிகன் ஹஸ்முவுக்கு பாதியில் படிப்பை நிறுத்திய குழந்தைகள் பலரை அனுப்பினர். 1995 முதல் 1997 வரை, இத்தகைய குழந்தைகள், 27 பேரை அவர் தத்தெடுத்து வளர்த்தார். அவர்களுக்கு உணவு பொருட்களையும் உறைவிட வசதியையும் கல்விக் கட்டணத்தையும் வழங்கினார். இறுதியில் இக்குழந்தைகள் பள்ளிகளுக்குத் திரும்பினர். ழயிகன் ஹஸ்முவின் அறிவுறுத்தல்-அக்கறையினால், அவர்கள் முந்திய கூடாத பழக்க வழக்கங்களைப் போக்கினர். படிப்பை நேசிக்கின்றனர். குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கண்டு ழயிகன் ஹஸ்மு இதயப்பூர்வமாக ஆனந்தமடைந்தார்.
1 2
|