• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-22 15:16:44    
அன்புள்ள தாய்

cri

"எனது தாய் அன்பை ஒவ்வொரு குழந்தைக்கும் அளிக்க விரும்புகின்றேன். நான் ஒரு ஆசிரியை. மாணவர்களுக்கு கல்வியறிவை புகட்டி, பல்வேறு துறைகளில் அவர்களுக்கு நல்லவற்றை அறிவுறுத்தி வழிகாட்ட வேண்டும் என்பது, ஆசிரியர்களின் கடமையாகும். மாணவர்களின் பெற்றோர்கள், கவலையின்றி தத்தமது குழந்தைகளை என்னிடம் அனுப்பியுள்ளனர். நான், ஒரு ஆசிரியையின் கடப்பாட்டை நிறைவேற்றி, இம்மாணவர்களை செவ்வனே பராமரித்து, நேசிக்க வேண்டும்" என்றார், ழயிகன் ஹஸ்மு.
ழயிகன் ஹஸ்முவின் இச்செயல், அவரது சகமாணவர்கள் மற்றும் நண்பர்களின் ஆமோதிப்பைப் பெற்றிருக்கின்றது, அவர்களில் சிலர், சொந்த பணத்தை வறிய மாணவர்களுக்கு வழந்ங்கினர். இவ்வாறு, அன்பு தாய்களின் எண்ணிக்கை, இடைவிடாமல் அதிகரித்துள்ளது.

1995 முதல் 2006 வரை, ழயிகன் ஹஸ்முவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் "அன்புத்தாய்கள்" கல்விக் கட்டணம், வாழ்க்கைச் செலவு ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம், ஆயிரத்துக்கும் அதிகமான வறிய மாணவர்கள் தொடர்ந்து படிக்க உதவ முடிந்தது என்று அறியப்படுகின்றது.

இவ்வாண்டு இளையோர் இடைநிலைப்பள்ளியில் கல்வி பயிலும் உய்கூர் இன மாணவி குசாரினுரின் தந்தை வெகு காலத்துக்கு முன்பே காலமானார். தாய்க்கு பணியின்றி அல்லல்படுகின்றார். இதனால், குடும்ப வாழ்க்கை மிகவும் இன்னல். அவளுக்கும் இதர இரண்டு சகோதரிகளுக்கும் தேவைப்படும் கல்வி கட்டணம் பற்றி தாய் மிகவும் கவலைப்படுகின்றார். ழயிகன் ஹஸ்முவும் இதர அன்புத் தாய்களும் இத்தகவலை அறிந்ததும், கல்விக் கட்டணம் மற்றும் சில வாழ்க்கைப் பயன்பாட்டுப் பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கினர். அன்புத் தாய் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம், குசாரினுர், நன்றியுணர்வுடையவராக கண்ணீர் விடுவார். அவர் கூறியதாவது:

"அன்புத்தாய்கள் எனது குடும்பத்தின் இன்னலை அறிந்த பின், கல்விக் கட்டணத்தையும் வாழ்க்கைப் பயன்பாட்டுப் பொருட்களையும் வழங்குவார்கள். புத்தாண்டு தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் அவர்கள் எனது குடும்பத்துக்கு ஆடைகள், அரிசி, கோதுமை மாவு, எண்ணெய் முதலியவற்றை அன்பளிப்பாக தருவார்கள். அவர்கள் இன்றி, எனது குடும்ப நிலைமை எவ்வாறு இருக்கும் என்று கூற முடியாது. நான் உண்மையிலேயே அவர்களுக்கு பெரும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். நான் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அவர்களுக்கு நன்றி கூற வேண்டும்" என்றார், அவர்.

கடும் நோய்வாய்பட்ட பல மாணவர்களும் ழயிகன் ஹஸ்முவின் உதவியை நாடினர். பூர்வாங்க புள்ளி விவரங்களின் படி, கடும் நோய்வாய்பட்ட 18 மாணவர்களுக்கு அவர் சிகிச்சைச் செலவைத் திரட்டி வழங்கினார். அவரும் அவரது நண்பர்களும் வறிய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குவது பற்றிய செய்தியை மென்மேலும் அதிகமானவர்கள் அறிந்து கொண்டுள்ளனர். அவர்களின் அன்புச் செயலும் முழு சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2005ம் ஆண்டில், சிங்கியாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் அறக்கொடை தலைமைச் சங்கத்தின் ஆதரவுடன், "அன்புத்தாய் சிறப்பு நிதியம்" நிறுவப்பட்டது. சமூகத்தின் பல்வேறு துறையினர் 3 லட்சம் யுவானை இந்நிதியத்துக்கு வழஹ்கினர். வறிய குழந்தைகளுக்கு அவர்கள் பங்காற்றியுள்ளனர்.


1 2