2006ம் ஆண்டில் இந்துமாக்கடலிலான அகழ்வுப்பணிக்கு பல லட்சக்கணக்கான டாலர்களை இந்தியா செல்வழிக்கவேண்டியிருந்தது என்கிறார் சாங் ஹாய்ச்சி எனும் மூத்த அறிவியலாளர்.
அதிக பணம் செலவழித்து இந்த இயற்கை வாயு ஹைட்ரேட் வளத்தை அகழ்வு செய்யவேண்டும் என்பது தவிர, குறைந்த வெப்ப நிலையில், அதிக அழுத்ததில் உருவாகும் இந்த படிக வளத்தின் நிலைத்தன்மை குறைந்த அளவே என்பதும் சிக்கலான ஒரு விடயமே.
எரியக்கூடிய பனிக்கட்டி என்று அழைக்கப்படும் இந்த இயற்கைவாயு ஹைட்ரேட், உலகின் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளங்களின் ஒட்டுமொத்த அளவைப்போல் இருமடங்கு இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
ஆனால் தற்போதுள்ள எரிபொருட்களில் கரியமில வாயுக்களின் வெளியேற்றத்தை போல் இந்த எரியும் பனிக்கட்டியிலும் கரியமில வாயு வெளிப்படும். காரணம் ஹைட்ரேட் என்பது நீர் மூலக்கூறும், மீத்தேன் மற்றும் கரியமில வாயுக்களின் மூலக்கூறுகளும் பிண்ணிப்பிணைந்த ஒரு படிகமாகும். எனவே கடலுக்கடியிலேயே கரியமில வாயுவை பிரித்தெடுக்காமல் போனால் பயன்படுத்தும் போது தீவிர சுற்றுச்சூழல் மாடுபாடு ஏற்படும்.
தற்போது இயற்கை வாயுவின் விலை ஒரு கியூபிக் மீட்டர் 0.125 டாலர் என்றால் இந்த எரியும் பனிக்கட்டி எனப்படும் இயற்கைவாயு ஹைட்ரேட்ட் படிகத்தின் ஒரு கியூபிக் மீட்டர் விலை 1 டாலர். அதாவது 8 மடங்கு (7 மடங்கு விலை அதிகம்). ஆனால் காலப்போக்கில் இயற்கை வாயு, பெட்ரோல், நிலக்கரி எல்லாம் தீர்ந்து போனால் இவற்றின் மொத்த இருப்பில் இருமடங்குள்ள இயற்கை வாயு ஹைட்ரேட்களை பயன்படுத்துவதுவதைத் தவிர வேறு வழியில்லை.
இந்த உண்மை சுட்டெரிக்கவேதான் இந்த வளத்தை பற்றி மேலதிக ஆய்வுகளுக்கும், அகவுக்கும் இந்த வளத்தின் தொடர்புடைய தொழில்நுட்பத்தை பெற்ற நாடுகள் வரிந்து கட்டிக்கொண்டு கடலில் இறங்கியுள்ளன.
இன்னும் 70 ஆண்டுகளில் சுரண்டியெடுக்கப்படக்கூடிய அனைத்து எரியாற்றல் வளமும் தீர்ந்து போகும் நிலையில், இந்த எரியும் பனிக்கட்டியை நாடி, தேடி, ஓட்டி வரும் நிர்ப்பந்தம் எல்லா நாடுகளுக்கும் ஏற்படும்.
எனவே, இது தொடர்பான ஆய்வு மற்றும் மேம்பாட்டு நகர்வுகள் அத்தியாவசியாமிறன. 1 2 3
|