• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-27 10:30:17    
தமிழ் மூலம் சீனம் பாடம் 86

cri

கிளிடஸ்........கலை கடந்த வகுப்பில் நேரம் பற்றி வேறு இரண்டு சொற்களை அதாவது ஷாங், சியா என்ற சொற்களை சேர்த்து பயன்படுத்திய பின் எனக்கு கொஞ்சம் கஷ்டம் ஏற்பட்டது. மெதுவாக வாக்கியம் வாக்கியமாக பயிற்சி செய்யலாமே.

கலை.......கிளிடஸ் நீங்கள் சொன்னது சரிதான். சில சமயங்களில் குழப்பமாகும். சரி இந்த வகுப்பில் நாம் முக்கியமாக வாக்கியம் வாக்கியமாக பயிற்சி செய்வோம்.

கிளிடஸ்.......இதை கேட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சி. பயிற்சியை துவக்கலாமா

கலை........ ஷாங் 上, சியா 下 என்ற சொற்களை உண்மையாக கற்றுக் கொண்டீர்களா?அன்றாட வாழ்க்கையில் இவற்றை தாராளமாக பயன்படுத்த முடியுமா?

கிளிடஸ்.......முடியும் என்று நினைக்கிறேன். நேரத்தை குறிக்கும் போது ஷாங் என்று குறிப்பிட்டால் கடந்த என்று பொருள்படுகின்றது. திசையை குறிப்பிடும் போது மேல் என்று பொருள்படுகின்றது. சியா என்று குறிப்பிட்ட போது அடுத்த என்று பொருள்படுகின்றது. திசையை குறிப்பிடும் போது சியா என்றால் கீழ் என்று பொருள்படுகின்றது. கலை நான் மீளாய்வு செய்தது சரிதானா?

கலை......நூற்றுக்கு நூறு சரிதான். ஆனால் வாக்கியத்தில் சேர்த்து பயன்படுத்துவதில் உங்களுக்கு பிரச்சினை இருக்காது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

கிளிடஸ்.......அப்படியிருந்தால் நீங்கள் சிறிய சோதனை செய்யுங்கள். நான் பதிலளிக்கும் போது எனது திறனை நீங்கள் அறியலாம்.

கலை......சரி நான் சீன மொழியில் வினவுகின்றேன். நீங்கள் முதலில் சீன மொழியில் வாக்கியத்தை மீண்டும் குறிப்பிட்டு பிறகு சீன மொழியில் பதிலளிக்க வேண்டும். எப்படி.

கிளிடஸ்........நான் முயற்சி செய்வேன்.

கலை........上          个  月           是   几 月?
                    ஷாங் க யூவே ஷ் ஜி யூவே?
கடந்த மாதம் எந்த மாதம்?

கிளிடஸ்......... 上           个 月           是   几    月?
                              ஷாங் க யூவே ஷ் ஜி யூவே?
கடந்த மாதம் எந்த மாதம்?

கலை................上          个 月           是    10    月?
                            ஷாங் க யூவே ஷ் ஷ் யூவே.
கடந்த மாதம் அக்டோபர் மாதம்.

கிளிடஸ்...........上          个 月           是    10    月.
                              ஷாங் க யூவே ஷ் ஷ் யூவே.
கடந்த மாதம் அக்டோபர் மாதம்.

கலை............上          个 星       期         六      是  几     号?
                         ஷாங் க சின் ச்சி லியூ ஷ் ஜி ஹோ?
கடந்த சனிக்கிழமை எந்த நாள்?

கிளிடஸ்............上           个 星        期     六        是 几     号?
                                ஷாங் க சின் ச்சி லியூ ஷ் ஜி ஹோ?
கடந்த சனிக்கிழமை எந்த நாள்?

கலை......... 上         个 星       期      六        是 11          号。
                     ஷாங் க சின் ச்சி லியூ ஷ் ஷ்யி ஹோ.
கடந்த சனிக் கிழமை 11ம் நாள்.

கிளிடஸ்........ 上           个 星        期    六        是    11         号。
                             ஷாங் க சின் ச்சி லியூ ஷ் ஷ்யி ஹோ.
கடந்த சனிக் கிழமை 11ம் நாள்.

கிலை........昨            天         是    几    号?
                     ச்சோ தியன் ஷ் ஜி ஹோ?
நேற்று எந்த நாள்?

கிளிடஸ்...........昨           天         是   几    号?
                             ச்சோ தியன் ஷ் ஜி ஹோ?
நேற்று எந்த நாள்?

கலை...........昨           天          是         1 9           号。
                       ச்சோ தியன் ஷ் ஷி ச்சியூ ஹோ.
நேற்று 19ம் நாள்.

கிளிடஸ்...........昨          天          是        1 9              号。
                             ச்சோ தியன் ஷ் ஷி ச்சியூ ஹோ.
நேற்று 19ம் நாள்.

1 2