• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-27 17:16:40    
கண்பார்வையற்றவருக்கான திரைப்பட அரங்கு

cri

சீனாவில் சுமார் 6 கோடி ஊனமுற்றோர் உள்ளனர். சிறப்பு சமூகக் குழு என்ற முறையில், அவர்களின் உரிமைகள், சீனாவின் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, சீன அரசு மற்றும் சமூகத்தின் பல்வேறு துறையினர்களும் அவர்களுக்கு பன்முகங்களிலும் கவனத்தையும் உதவிகளையும் வழங்குகின்றனர்.

கண்பார்வையற்றவருக்கான திரைப்பட அரங்கு

பெய்ஜிங் மாநகரின் மேற்கு GU LOU வீதியில் அமைந்துள்ள நான்கு பக்கம் வீடுகளும் நடுவில் முற்றமும் கொண்ட ஒரு சாதாரணக் கட்டிடத்தில், சிறப்பு திரைப்பட அரங்கு ஒன்று உள்ளது. பரப்பளவு 30 சதுர மீட்டருக்குட்பட்ட இந்த அரங்கில், திரை இல்லை. தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று, DVD ஒன்று, ஒலி பெருக்கி ஒன்று ஆகியவை மட்டும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, இங்கே அமர்ந்துள்ள பார்வையாளர்கள் அனைவரும் விழிப்புலன் அற்றவர்கள். திரைப்படத்தை விளக்கிக் கூறும் வழிமுறை மூலம் திரைப்படங்களின் அம்சங்களையும் காட்சிகளையும் இந்த விழிப்புலனற்றோருக்கு ஒருவர் விளக்கிக் கூறுகிறார்.

இந்த சிறிய திரைப்பட அரங்குதான் விழிப்புலனற்ற நண்பர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது. 48 வயதான லி குய் யிங் அம்மையார், 2001ஆம் ஆண்டில் ஒரு கண்ணில் பார்வை இழந்தார். அவரின் மற்றொரு கண் ஏறக்குறைய எந்த பொருட்களையும் சரியாகப் பார்க்க முடியாது. தற்போது, அவர் இந்தத் திரைப்பட அரங்கிற்கு அடிக்கடி வரும் விருந்தினர் ஆவார். அவர் கூறியதாவது—

"வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, மூக்கு கண்ணாடியை அணிந்தாலும், தெளிவாகப் பார்க்க முடியாது. அந்த நிகழ்ச்சிகள் பற்றி எனக்கு விபரமாக சொல்வதற்கு யாரும் இல்லை. ஏனென்றால், எனது குழந்தை பள்ளிக்குச் செல்கிறார். என் கணவன் வேலைக்குச் செல்கிறார். இந்தத் திரைப்பட அரங்கில் திரைப்படங்களை விளக்கிக் கூறும் நிகழ்ச்சி மக்களை மிகவும் ஈர்க்கிறது" என்றார் அவர்.

68 வயதான ஹோ ஜியான் கோ என்பவர், இங்கு வந்து திரைப்படங்களைக் கேட்க, வீட்டிலிருந்து பேருந்து மூலம் 2 மணி நேரம் செலவிட வேண்டும். இருப்பினும் அவர் இதில் பேரார்வம் கொண்டிருக்கிறார்.

1 2