• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-27 17:16:40    
கண்பார்வையற்றவருக்கான திரைப்பட அரங்கு

cri

விழிப்புலனற்றவர்களுக்கான திரைப்பட அரங்கு, விழிப்புலனற்ற நண்பர்களுக்கு இலவசமானது. 2005ஆம் ஆண்டு ஜுலை திங்கள் துவங்கியது முதல் இன்று வரை, இந்தத் திரைப்பட அரங்கில், 200க்கும் அதிகமான விழிப்புலன் இழந்த நண்பர்களுக்கு சுமார் 40 திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படங்களில், உள்நாட்டின் சிறந்த திரைப்படங்களும், இளவரசி Sissi உள்ளிட்ட அந்நிய திரைப்படங்களும் அடங்கும்.

இந்தத் திரைப்பட அரங்கைத் துவக்கிய தா வெய் என்பவருக்கு, இவ்வாண்டு 48 வயதாகிறது. திரைப்படங்களை விளக்கிக் கூறும் முக்கியமானவர்களில் ஒருவராகவும் அவர் திகழ்கிறார். அவர் கூறியதாவது—

"திரைப்படங்களைப் பற்றி விளக்கிக் கூறுவது வேடிக்கையானது. ஒரு திரைப்படத்தை விளக்கிக் கூறும் போது, தனது பார்வையில் விழிப்புலனற்றவர்களுக்கு தொடர்பான தகவல்களை வழங்கிய பின், தாம் வாழும் இந்த முப்பரிமாண இடத்தை அவர் அறிந்து கொள்ள முடியும். தாம் மற்றவர்களைப் போலவே இருப்பதாக அவர் உணர்கிறார். தாம் வாழும் இடம் மிகவும் உண்மையாக இருப்பதை அவர் உணர்ந்து கொள்ளலாம்" என்றார் அவர்.

ஒரு சமயம் விழிப்புலனற்ற ஒருவரிடம் திரைப்படத்தை விளக்கிக் கூறியதன் காரணமாக, தா வெய், தற்போதைய பாதையில் நடந்து வருகிறார். அந்த நிகழ்ச்சி தனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், இந்தத் திரைப்பட அரங்கைத் அவர் துவக்கினார். பொது நலத் தன்மை வாய்ந்த விழிப்புலனற்றோருக்கான கல்வி நிறுவனமான ஹோங் தான் தான் என்ற கல்வி மற்றும் பண்பாட்டுப் பரிமாற்ற மையத்தையும் அவர் துவக்கினார். இந்த நிறுவனம், சிறப்பாக விழிப்புலனற்ற நண்பர்களுக்கு உதவி வழங்கும் நிறுவனமாகும்.

கண்பார்வையற்றோருடன் மேலும் நன்றாக தொடர்பு கொள்ளும் வகையில், தா வெய் அடிக்கடி தமது மனைவியின் துணையுடன் கண்களை மூடி நடந்து, விழிப்புலனற்றோரின் உள உலகத்தை உணர்ந்து கொள்கிறார். இந்த முயற்சிகளின் மூலம் தான், அவரால் மிகச் சிறப்பாக புரிந்து கொண்டு உணரக் கூடிய வகையில் திரைப்படங்களை விளக்கிக் கூற முடிகிறது.

தற்போது மேலும் அதிகமானோர் விழிப்புலனற்றோருக்கான திரைப்பட அரங்கின் சேவை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அரங்கில் வேலை செய்யும் பெரும்பாலானோர், தன்னார்வத் தொண்டர்களாவர். பல்கலைக்கழகப் படிப்பு முடித்த சேன் சுவான் என்பவர், இங்கு ஓராண்டுக்கு மேலாக வேலை செய்துள்ளார். ஆனால் அவர் ஊதியம் எதையும் பெறவில்லை.

அன்புணர்வு மற்றும் உற்சாகத்துடன், இந்தத் தொண்டர்கள் உலகத்தைப் பார்க்க முடியாத விழிப்புலனற்ற நண்பர்களுக்கு மிக அழகான நிறத்தைக் கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்களது கனிவான குரல் மூலம், விழிப்புலனற்றவர்களை திரைப்படங்களைப் பார்க்கச் செய்கின்றனர்.


1 2